Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட்ரா சக்கை! என் பேச்சை கேட்கவில்லை என்றால் ராஜினாமா.. பிசிசிஐயை மிரட்டிய அஜித் அகார்கர்

மும்பை : தமது பேச்சைக் கேட்கவில்லை என்றால் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வு குழு உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விடுவேன் என பிசிசிஐ அஜித் அகார்கர் மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.

அதில் முக்கிய மாற்றம் டி20 உலக கோப்பையை வென்ற ரோகித் சர்மா விராட் கோலி, ஜடேஜா, ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். இதனை அடுத்து இந்திய அணியின் புதிய டி20 அணி கேப்டன் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. அப்போது ஹர்திக் பாண்டியாவை தான் புதிய கேப்டனாக நியமிக்க வேண்டும் என பிசிசிஐ உள்ள முக்கிய நிர்வாகிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

cricket Rohit sharma virat kohli

ரோகித் சர்மா இல்லாத நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக பணியாற்றியதை சுட்டிக்காட்டி அவருக்கு இந்த பதவி வழங்க வேண்டும் என்று குரல் வலுத்திருக்கிறது. இதற்கு பின்னால் முக்கிய காரணம் ஒன்று இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பதால் அவர் இந்திய டி20 கேப்டனாக இருப்பது மறைமுகமாக மும்பை அணிக்கு தான் வர்த்தக ரீதியில் சாதகம்.

இதனால் தான் பலரும் ஹர்திக் பாண்டியாவின் பெயரை பரீசிலினை செய்தார்கள். ஆனால் இதற்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீரம் தலைமை தேர்வுக்குழு உறுப்பினரான அஜித் அகார்கரும் அனுமதி வழங்கவில்லை. ஹர்திக் பாண்டியாவுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் அவரை நம்பி டி20 அணியின் கேப்டன் பதவியை வழங்க முடியாது என்று அஜித் அகார்கர் விடாப்பிடியாக கூறி இருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் சூரியகுமார் யாதவ் தான் சரியான நபர் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் அஜித் அகார்கரின் பேச்சை ஜெய்ஷா கேட்கவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதனை அடுத்து தமது பேச்சைக் கேட்கவில்லை என்றால் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய நேரிடும் என்று அஜித் அகார்கர் மிரட்டி இருக்கிறார்.

தேர்வு குழு தலைவராக அஜித் அகார்கர் செயல்பட்டு தற்போது தான் இந்திய டி20 அணி உலக கோப்பையை வென்று வந்தது. இதனால் அதற்குள் அஜித் அகார்கர் ராஜினாமா செய்தால் பலருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக ஜெய்ஷா தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்கி இருக்கிறார். இதனால் சூரிய குமார் யாதவும் கேப்டனாக மாறியதற்கு அஜித் அகார்கர் எடுத்த முயற்சிதான் காரணம் என்று செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.

Story first published: Sunday, August 25, 2024, 12:55 [IST]
Other articles published on Aug 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+