Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை 2024- நம்பர் 1 அணியாக தரவரிசையில் களமிறங்கும் இந்தியா.. மகுடம் கிடைக்குமா?

மும்பை : ஐசிசி t20 உலக கோப்பை 2024 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் இரண்டாம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி டி20 தர வரிசையில் நம்பர் ஒன் அணியாக களமிறங்க உள்ளது. இது இந்திய அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

டி20 உலக கோப்பை அறிமுகப்படுத்தப்பட்ட 2007 ஆம் ஆண்டிலேயே இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. தற்போது இந்த தொடர் முதல் முறையாக அமெரிக்காவில் நடைபெறுகிறது.

India cricket team heading in to T20 World cup 2024 as no 1 in rankings

இந்த தொடரில் இறுதி போட்டி மற்றும் முக்கிய ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும் நடைபெறுகின்றன. இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடங்குவதற்கு முன் ஐசிசி டி20 தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டு இருக்கிறது. இதில் இந்திய அணி 264 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கின்றது. 2021 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணி 257 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தற்போது ஆஸ்திரேலிய அணி நல்ல பார்மில் இருப்பதால் நடப்பு டி20 உலக கோப்பை வென்று முதல் இடத்தைப் பிடிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் இந்த ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்ததுதான் பார்க்க வேண்டும். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி 254 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் தற்போது தென்னாப்பிரிக்காவை 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்திய இரண்டு முறை சாம்பியன் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி 252 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

நியூசிலாந்த அணி 250 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் 244 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தை பகிர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் டி20 பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில் சூரிய குமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராண்டன் கிங் அபாரமாக விளையாடியதால் தற்போது 5 புள்ளிகள் முன்னேறி எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

இதேபோன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 26 பந்துகளில் 69 ரன்கள் குவித்த ஜான்சன் சார்லஸ் 17 இடங்கள் முன்னேறி 20வது இடத்தில் கொடுத்திருக்கிறார். இதுபோன்று மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரான கையில் மேயர்ஸ் 12 இடங்கள் முன்னேறி 31 வது இடத்தை பிடித்திருக்கிறார். பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஷாகின் ஆப்ரிடி அவர்களின் மூன்று இடங்கள் முன்னேறி 11வது இடத்திலும் மற்றொரு பாகிஸ்தான் வீரரான இடங்கள் முன்னேறி 38 வது இடத்தில் உள்ளன.

Story first published: Thursday, May 30, 2024, 6:53 [IST]
Other articles published on May 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+