Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக வருகிறாரா கோலி? இது நடந்தால், அது நடக்கும்..பிசிசிஐக்கு வழியில்ல

மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்தவுடன் இந்திய அணியில் தற்போது பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்திய அணியின் சீனியர் வீரர்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விலகி கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறார்கள்.

இதனால் வரும் தென்னாப்பிரிக்கா தொடரில் முற்றிலும் இளம் வீரர்கள் அடங்கிய டி20 மற்றும் ஒரு நாள் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இடம்பெறாததால் சூரியகுமார் யாதவ் டி20 அணி கேப்டன் ஆகவும் கே எல் ராகுல் ஒரு நாள் அணி கேப்டனாகவும் ரோகித் சர்மா டெஸ்ட் அணி கேப்டன் ஆகவும் திகழ்கிறார்.

India cricket team - virat kohli should take charge as test team captain

தற்போது ரோகித் சர்மாவுக்கு வேலை பளு அதிகமாக இருப்பதால் அவரால் டி20 கேப்டன் பொறுப்பை மேற்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா கேப்டனாக இடம் பெற வேண்டும் என்றால் அவர் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை துறக்க முடிவெடுத்திருக்கிறார்.வரும் ஆண்டு டி20க்கு டெஸ்ட் போட்டிக்கும் தான் மிகவும் முக்கியம்.

இதனால் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளலாம் என ரோகித் சர்மா முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் அல்லது டி20 என இரண்டிலும் ஏதேனும் ஒன்றில் தான் தம்மால் தொடர முடியும் என்றும் பி சி சி ஐ இடம் ரோகித் சர்மா திட்டவட்டமாக கூறிவிட்டார் என தெரிகிறது. இதனால் பழையபடி விராட் கோலியை டெஸ்ட் அணி கேப்டனாக பதவி ஏற்க அறிவுறுத்தலாமா என பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வல்லுனர்கள் ரோகித் சர்மாவுக்கு தொடர்ந்து மூன்று கிரிக்கெட் வடிவங்களிலும் கேப்டனாக செயல்பட முடியாது என்ற காரணத்தினால் டெஸ்ட் கேப்டன் பதவியை விராட் கோலி எடுத்துக்கொண்டு கேப்டனாக செயல்பட்டால் மட்டுமே அடுத்த இரண்டு ஆண்டுகள் எந்த பிரச்சினையும் இன்றி இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருக்க முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் விராட் கோலி இதற்கு ஓகே சொல்வாரா இல்லை கில், ஸ்ரேயாஸ் அல்லது பும்ரா போன்ற இளம் கேப்டன்கள் வருவார்களா என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, December 2, 2023, 0:30 [IST]
Other articles published on Dec 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+