எதோட எதைய்யா முடிச்சு போடறீங்க... ஒருவேளை உண்மையா இருக்குமோ?
கோவா : தன்னுடைய திருமணத்தையொட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் இருந்து விலகியுள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா.
அவர் திருமணம் செய்யவுள்ள பெண் குறித்து அவர் இதுவரை எதுவும் அறிவிக்காத நிலையில், அவர் யார் என்பது குறித்த பல்வேறு யூகங்கள் சமூக வலைதளங்களில் கன்னா பின்னாவென்று பரவி வருகிறது.
தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை பும்ரா திருமணம் செய்யவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி தீயாய் பரவி வருகிறது.

பங்கேற்காத பும்ரா
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடிய ஜஸ்பிரீத் பும்ரா, 4வது போட்டியில் விளையாடவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

மணமகள் குறித்து மௌனம்
இந்நிலையில் அவர் தன்னுடைய திருமணத்தையொட்டியே இந்த தொடர்களில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. தன்னுடைய திருமணம் குறித்தும் வருங்கால மனைவி குறித்தும் தொடர்ந்து பும்ரா மௌனம் சாதித்து வருகிறார். ஆயினும் வரும் 14, 15 தேதிகளில் கோவாவில் அவரது திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

மறுத்த அனுபமா தாய்
அவரது வருங்கால மனைவி குறித்தும் இணையத்தில் பல்வேறு செய்திகள் பரவி வருகின்றனர். தென்னிந்திய நடிகை அனுபமா பரமேஸ்வரனை பும்ரா மணமுடிக்க உள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. ஆனால், அனுபமாவின் தாய் இதை மறுத்துள்ளார். இருவரும் மிகச்சிறந்த நண்பர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுப்பில் உள்ள சஞ்சனா
இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை பும்ரா மணமுடிக்க உள்ளதாக தற்போது செய்திகள் பரவி வருகின்றன. பும்ரா தன்னுடைய திருமணத்தையொட்டி தற்போது விடுப்பில் உள்ள நிலையில், பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் சஞ்சனாவும் தற்போது விடுப்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பும்ரா -சஞ்சனா வீடியோ வைரல்
இந்நிலையில் பிசிசிஐ ஆண்டு விருதுகள் விழாவிற்காக பும்ராவை சஞ்சனா பேட்டி கண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2014 மிஸ் இந்தியா போட்டியில் இறுதிச்சுற்று வரை வந்தவர் சஞ்சனா. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு முன்பு எம்டிவியில் ரியாலிட்டி ஷோ செய்து வந்தார் இவர்.


Click it and Unblock the Notifications