Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழ் பாட்டை கேட்டு வெறியேற்றும் ஜடேஜா.. இவ்வளவு வேகமாக ரெடி ஆகுறாரு.. அதுதான் காரணமோ? - வீடியோ

ராஜ்காட் : இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல்ரவுண்டர்களின் ஒருவரான ரவீந்திர ஜடேஜா தற்போது முழு உடல் தகுதியை அடையும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜடேஜா இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில், அவருக்கு முட்டியில் காயம் ஏற்பட்டது.

இதனை அடுத்து ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய ஜடேஜாவுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது .

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

இதனால் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஜடேஜா இடம்பெறவில்லை. ஜடேஜா தனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து விட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்தார். தற்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஜடேஜா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள வீடியோ அமைந்துள்ளது.

தமிழ் பாடல்

தமிழ் பாடல்

காரணம் ஜடேஜா தற்போது உடற்பயிற்சி கூடத்தில் தன்னுடைய உடல் தகுதியை எட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். முதலில் ஜடேஜா ஜிம்மில் ஓடிவரும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு பின்னால் சின்னவரு சிறப்பு தான்.. சீண்டிப்புட்டால் நெருப்பு தான்.. உதைச்சி எலும்பெல்லாம் என்னுவான்.. பட்டி தொட்டி எல்லாம் பட்டையை தான் கிளப்புவான். வம்பு தும்பு ஆட்டம் எல்லாம் வரிஞ்சு கட்டி தான் இறங்குவான் என்ற பாடலின் வரிகள் இடம்பெற்றுள்ளது.

எதற்காக பயிற்சி

எதற்காக பயிற்சி

இதனால் ஜடேஜா டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி வருவதை தான் இப்படி மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறாரா என்று ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பது உண்மை. இதனால் தமிழில் ஜடேஜா பாடலை பதிவிட்டுள்ளதால் சிஎஸ்கேவுக்கு திரும்புவதை தான் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்துள்ளது.

சிஎஸ்கே க்கு பதில்

ஆனால் இந்தப் பாடலில் பிரச்சனை செய்தால் திரும்பி அடிப்பேன். சண்டைக்கு முதல் நாளாக இருப்பேன் போன்ற அர்த்தம் இடம்பெற்றுள்ளது. இது சமீபத்தில் ஜடேஜாவை விடுவிக்கும் எண்ணம் இல்லை என்று கூறிய சிஎஸ்கே அணிக்கு தமிழிலே பதில் சொல்லும் வகையில் இருப்பதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Thursday, October 20, 2022, 18:14 [IST]
Other articles published on Oct 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+