இனிமே கண்ணாடி இல்லாம என்னை வெளிய பாக்க முடியாது.. காரணத்தை வெளியிட்ட ரோஹித் சர்மா
மும்பை: ஓக்லே குழுமத்தின் விளம்பர தூதராக இந்திய துவக்க அணியின் வீரர் ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
உலக தரத்திலான கிரிக்கெட் வீரரான ரோகித் சர்மா தங்களது பொருட்களின் விளம்பரங்களுக்கு மிகவும் பொருத்தமானவர் என்று ஓக்லே குளோபல் பிராண்டின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஓக்லேவுடன் இணைந்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் அதன் சிறந்த லென்ஸ் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டைல் மிகவும் சிறப்பானது என்றும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா ஓக்லே குழுமத்தில் விளம்பர தூதராக இணைந்துள்ளார். இனிமேல் ஓக்லே கண்ணாடிகளின் விளம்பர தூதராக அவர் செயல்படுவார் என்று ஓக்லே குளோபல் பிராண்டின் இயக்குநர் பென் கோஸ் தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா சர்வதேச அளவிலான வீரர் என்றும் அவரை விளம்பர தூதராக நியமித்ததன்மூலம் தங்களது விற்பனை அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தான் எப்போதும் விரும்பக்கூடிய ஓக்லேவுடன் இணைந்தது குறித்து மகிழ்ச்சியளிப்பதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். நல்ல பாதுகாப்பு, உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய லென்ஸ் மற்றும் ஸ்டைல் ஆகியவற்றை கொண்ட ஓக்லே கண்ணாடிகள் அனைவருக்கும் மிகவும் சரியான தேர்வாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தன்னுடைய தேர்வு இந்த கண்ணாடிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications