இரட்டை சதம் அடிப்பதற்குள் டிக்ளேர் ஏன்? ஜடேஜா கொடுத்த அப்டேட்.. உண்மையில் நடந்தது என்ன?
மொஹாலி: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
முதல் இன்னிங்சில் ஜடேஜா அதிரடியாக விளையாடி 175 ரன்கள் அடித்தார். இதனால் இந்திய அணி 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 108 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

டிக்ளேர்
இந்த நிலையில் ஜடேஜா 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேப்டன் ரோகித் சர்மா இந்திய இன்னிங்சை டிக்ளேர் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 20 நிமிடம் கொடுத்திருந்தால் ஜடேஜா இரட்டை சதம் விளாசி இருப்பார் என்றும், ஆனால் அணி நிர்வாகம் அதனை தடுத்து விட்டதாகவும் ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ரசிகர்கள் புகார்
சச்சின் இதே போன்று இரட்டை சதம் அடிப்பதற்குள் டிராவிட் டிக்ளேர் செய்ததாகவும், தற்போது அதே பாணியில் பயிற்சியாளராக இருந்த டிராவிட் தான் இந்த முடிவை எடுத்திருப்பார் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள், தனிநபர் சாதனைகளை விட அணி தான் முக்கியம் என்றும் , ரோகித் எடுத்த முடிவு சரியானது தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜடேஜா விளக்கம்
இந்த நிலையில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து ஜடேஜா விளக்கம் அளித்துள்ளார். இலங்கை வீரர்கள் அனைவரும் சோர்வுடன் காணப்பட்டதால், அவர்கள் பேட்டிங் செய்யும் போது எளிதில் விக்கெட்டகளை வீழ்த்தலாம். இதனால் நான் தான் இன்னிங்சை டிக்ளேர் செய்யும் படி அணி நிர்வாகத்திடம் கூறினேன் என்று ஜடேஜா கூறியுள்ளார்.

விமர்சனம்
ஜடேஜாவின் இந்த விளக்கம் மூலம் டிக்ளேர் செய்தது ரோகித் எடுத்த முடிவோ அல்லது டிராவிட் எடுத்த முடிவோ அல்ல என்று தெளிவாக தெரிகிறது. எஞ்சிய போட்டிகளை வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இதனால் போட்டி சமனில் முடிந்தாலே அது இந்தியாவின் வாய்ப்பை பாதிக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications