3 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசம்.. இந்தியா தோல்விக்கு முக்கிய காரணம்.. புள்ளி விவரத்துடன் ஒரு அலசல்
மும்பை : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி பலமான அணியாக காகிதத்தில் விளங்கினாலும், போட்டியில் தோல்வியை தழுவுகிறது.
Recommended Video
கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பியது.
இந்த நிலையில், தற்போது பந்துவீச்சும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதனால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது குறைய தொடங்கிவிட்டது.

இந்தியாவின் குறை
ஆசிய கோப்பையில் இந்திய அணி வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், இறுதிப் போட்டிக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. டெத் பவுலிங் என்று சொல்ல கூடிய ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் வீரர்கள் ரன்களை வாரி வழங்குவது தான் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா இறுதிக் கட்ட பந்துவீச்சில் எந்த அளவு மோசமாக இருக்கிறது என்பதை காணலாம்.

கடந்த 3 ஆண்டுகள்
கடந்த 2020 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி டெத் ஓவர்களில் சராசரியாக 8.33 ரன்களை வழங்கி இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு இதுவே 8.61 ரன்களாக சராசரி உயர்ந்துள்ளது. ஆனால் நடப்பாண்டில் இது அளவில் இல்லாத மோசமான சராசரியாக ஒரு ஓவரில் 10.4 ரன்களை இந்தியா கொடுத்துள்ளது. இது பெரிய மைனசாக கருதப்படுகிறது.

டெத் பவுலர்கள்
இதே போன்று டெத் ஓவர்களில் கடந்த 2021ஆம் ஆண்டு புவனேஸ்வர் குமார் சராசரியாக 8 ரன்களை வழங்கி இருக்கிறார். ஷர்துல் தாக்கூர் 11.73 ரன்களும், முகமது ஷமி 10.14 ரன்களை வழங்கி இருக்கிறார்கள். இதுவே நடப்பாண்டில் புவனேஸ்வர் குமார் 10.73 ரன்களும், ஹர்சல் பட்டேல் 11.69 ரன்களும், ஆர்ஸ்தீப் சிங் 6.71 ரன்களையும் கொடுத்து இருக்கிறார்கள்.

எப்படி தீர்ப்பது?
ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ஒவ்வொரு அணியும் சராசரியாக 8 ரன்களை கொடுத்தால் அது ஓகே என்று சொல்லலாம். 8க்கு கீழ் இருந்தால் அது டாப் கிளாஸ். தற்போது இந்திய அணி 10க்கு மேல் ரன்களை சராசரியாக வழங்குகிறது. இதனை சரி செய்தாலே, இந்தியாவின் பாதி பிரச்சினை தீர்ந்துவிடும். இதனால் ஆர்ஸ்தீப், பும்ராவை வைத்து இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications