ஒரு விக்கெட் வீழ்த்தினாலும், அஸ்வின் தான் ஹூரோ.. முன்னாள் பயிற்சியாளர் பாராட்டு.. வெற்றி கிடைக்குமா?
அகமதாபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் 25 ஓவர்களை முதல் நாளில் மட்டும் வீசி உள்ளார்.
இதில் 57 ரன்கள் விட்டுக் கொடுத்தல் அஸ்வின் ஒரு விக்கெட்டை வீழ்த்திருக்கிறார். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 255 ரன்கள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
தற்போது களத்தில் உஸ்மான் கவஜான் 14 ரன்கள் உடனும் கேமரான் கிரீன் 49 ரன்களுடனும் இருக்கிறார்கள்.

போராட்டம்
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .இந்த நிலையில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், அஸ்வின் இன்று சிறப்பாக பந்து வீசியதாக கூறினார். இன்றைய நாளில் அவரிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி விக்கெட்டுக்காக போராடினார்.

அஸ்வினுக்கு பாராட்டு
டெஸ்ட் கிரிக்கெட்டில் எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது. அனைத்து நாட்களிலும் உங்களால் மூன்று அல்லது நான்கு விக்கெட்டுகளை எடுக்க முடியாது. ஆனால் தொடர்ந்து நாம் போராடிக் கொண்டிருந்தால் நிச்சயம் விக்கெட் கிடைக்கும். அவருடைய உழைப்புக்கு நாளையோ அல்லது இரண்டாவது இன்னிங்சிலோ நிச்சயம் விக்கெட்டுகள் கிடைக்கும்.
மற்ற மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை ஒப்பிட்டு பார்த்தால் அஸ்வின் தான் இன்று சிறப்பாக விளங்கினார்.

சாதகமாக இல்லை
இன்றைய ஆட்டத்தில் சில சமயங்களில் பார்க்கும்போது அது நன்றாகவே தெரிந்தது. குறிப்பாக ஆடுகளத்தில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக ஏதும் இல்லை. தொடர்ந்து நீண்ட ஓவர்களில் வீசி அணிக்காக போராடினார். ஸ்மித்துக்கு பந்து வீசும் போது தனியாக ஒரு யுத்தியை வகுத்து செயல்பட்டார். உஸ்மான் கவஜாவுக்கும் சரியான கோட்டில் பந்து வீசி நெருக்கடி கொடுத்தார்.

அஸ்வின் பலம்
அஸ்வினுடைய மிகப்பெரிய பலமே பேட்ஸ்மேன்கள் எவ்வாறு நகர்ந்து விளையாடுகிறார் என்பதை கடைசி நிமிடம் வரை பார்த்து அதற்கு தகுந்தார் போல் வந்து வீசுவது தான். பேட்ஸ்மேன்களில் அறிவுடன் அவர் விளையாடினார். ஸ்டெம்புக்கு நேராக பந்து வீசியதால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என தெரிந்தவுடன், தன்னுடைய லைனை அஸ்வின் மாற்றினார். அஸ்வின் கொடுத்து நெருக்கடியால் தான் டிராவிஸ் ஹெட் அடித்து ஆட முற்பட்டு தன்னுடைய விக்கெட்டை இழந்தார் என்று சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications