Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 விட விரைவில் முடிந்த 2வது ஒருநாள் போட்டி.. ஆஸி. அபார வெற்றி.. வரலாற்றிலேயே மோசமான தோல்வி

விசாகப்பட்டினம் : இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வரலாற்றிலேயே மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. டி20 போட்டியை விட , ஆட்டம் சீக்கிரமாக முடிந்துவிட்டது.

முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில், 2வது நாள் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மரண அடியை ரோகித் சர்மா படைக்கு கொடுத்துள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசியது. இதற்கு காரணம் மழையால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் நிலவியது.

 ஸ்டார்க் வேட்டை

ஸ்டார்க் வேட்டை

இதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி வீரர்கள் பெவிலியன் நோக்கி அணிவகுப்பு நடத்தினர். தொடக்க வீரர் சுப்மன் கில் டக் அவுட்டாக, மச்சானின கல்யாண சாப்பாட்டை சாப்பிட்டு வந்து அணிக்கு திரும்பிய ரோகித் சர்மா, 13 ரன்களில் நடையை கட்டினார். ஒருநாள் கிரிக்கெட்டில் சாதிப்பார் என நினைத்த அனைத்து ரசிகர்களையும் அவமானப்படுத்தப்பட்ட விதமாக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 2வது முறையாக கோல்டன் டக் ஆனார்.

போராடிய இந்தியா

போராடிய இந்தியா

ஃபார்ம்க்கு திரும்பிவிட்டார் என்று நேற்று தான் பாராட்டி செய்தி வெளியிட்டோம். அதற்குள் பழைய குருடி கதவை திறடி என்பது போல் ராகுல் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா அடித்த பந்தை அபாரமாக கேட்ச் பிடித்து ரன் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து விராட் கோலியும், ஜடேஜாவும் இணைந்து அணியை ஒரு அளவுக்கு காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

 117 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

117 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ஆனால் கோலி 31 ரன்கள் எடுத்திருந்த போது எல்பிடபிள்யூ ஆனார். ஜடேஜாவும் 16 ரன்களில் வெளியேறினார். எனினும் அக்சர் பட்டேல் தனி ஆளாக நின்று போராடி இந்திய அணியை கௌரவமான ஸ்கோரை எட்ட முயன்றார். இதனால் ஸ்டார்க் பந்தில் கூட தொடர்ந்து 2 சிக்சர் விளாசினார். ஆனால் எதிர்முனையில் யாரும் துணை நிற்காததால் இந்திய அணி 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். மிட்செல் ஸ்டார்க் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 9வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

சாதனை வெற்றி

சாதனை வெற்றி

இதனையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர். தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 10 பவுண்டரிகளை அடித்தார். இதன் மூலம் 30 பந்துகளில் அவர் அரைசதம் கடந்தார். இதே போன்று மறுமுனையில் நின்ற மிட்செல் மார்ஷ் இந்திய அணி பந்துவீச்சை சிதற அடித்தார். 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் அடித்த அவர் 36 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 11 ஓவர் முடிவில் வெற்றி இலக்கை விக்கெட்டுகளே விழாமல் எட்டியது இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக பந்துகள் எஞ்சிய நிலையில் இந்தியா தோல்வியை தழுவியது இதுவே முதல் முறையாகும்.

Story first published: Sunday, March 19, 2023, 18:14 [IST]
Other articles published on Mar 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+