சின்ன பிள்ளை போல் குதித்த 70 வயது வீரர்.. இந்தியாவின் வெற்றியால் கொண்டாட்டம் – வீடியோ
மெல்போர்ன் : டி20 உலககோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் நாளை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், ஸ்டார் ஹீரோக்களின் திரைப்படம் ரீலிஸ் ஆகவில்லை.
இதனால், இளைஞர்கள் பலரும், இது தீபாவளி போலவே இல்லையே என சமூக வலைத்தளத்தில் புலம்பி வந்தனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த நிலையில், நாடு முழுவதம் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிளாக்பஸ்டர் படத்தையே மிஞ்சும் அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை ரசிகர்களுக்கு கோலி, ஹர்திக் பாண்டியா வழங்கி இருக்கிறார். இந்தியா வெற்றி பெற்ற நிலையில், மாலை 7 மணிக்கு மேல் வெடிக்க வைத்திருந்த வெடி மற்றும் பட்டாசுகளை கொளுத்தி ரசிகர்கள் வெற்றியை கொண்டாடினர்.

கொண்டாடிய கவாஸ்கர்
இதே போன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் CHAK DE இந்தியா என்ற பாடரை பாடி உற்சாகமாக கொண்டாடினர்.இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கவாஸ்கர், சிறு குழந்தை போல் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார்.

மறக்க முடியாது
இதே போன்று தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், இர்பான் பதான் ஆகியோரும் பவுண்டரி லைன் அருகே நின்று கொண்டு இந்தியாவின் வெற்றியை கொண்டாடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வெற்றி குறித்து பேசிய கவாஸ்கர், இது தமது வாழ்நாளில் மறக்க முடியாத வெற்றி என்று கூறினார்.
நம்பிக்கையை அதிகரிக்கும்
இதனை தொடர்ந்து பேசிய அவர், விராட் கோலி விளையாடிய சிறந்த டி20 இன்னிங்ஸ் என்று பாராட்டினார். பின்னர் பேசிய ரவி சாஸ்த்ரி, ரோகித், ராகுல் ஆகியோர் ரன்கள் சேர்க்காத நிலையில் இந்தியா வென்று இருப்பதாக குறிப்பிட்டார். இந்த வெற்றி இந்தியாவின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications