Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமார், சுப்மன் கில் டக்.. 49 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த இந்தியா.. ஆஸி. அபார பந்துவீச்சு

விசாகப்பட்டினம் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில், வாழ்வா சாவா என்ற கட்டத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால், போட்டியின் முதல் ஒரு மணி நேரம் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.

 சுப்மன் கில்

சுப்மன் கில்

இதனையடுத்து முதலில் களமிறங்கிய சுப்மன் கில், ரோகித் சர்மா ஜோடி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தொடக்கத்தை அளித்தது. சுப்மன் கில் தேவையில்லாத ஒரு ஷாட் ஆடி பாயிண்டில் நின்ற பில்டரிடம் கேட்ச்சாகி டக் அவுட்டாகி வெளியேறினார்.

கோல்டன் டக்

கோல்டன் டக்

இதனைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா, வெளியே சென்ற பந்தை டிரைவ் செய்ய, அது சிலிப்பில் நின்ற ஃபில்டரிடம் கேட்சாக பிடிப்பட்டது. இதனால் ரோகித் 13 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 2வது முறையாக ஸ்டார்க் பந்துவீச்சில் கோல்டன் டக் ஆனார்.

ராகுல் அதிர்ச்சி

ராகுல் அதிர்ச்சி

இதனால் 32 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா விளையாடிய நிலையில், ராகுல், கோலி ஜோடி அணியை காப்பாறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேஎல் ராகுலும் 5 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

தடுமாறும் இந்தியா

தடுமாறும் இந்தியா

இதன் பிறகு ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் கவனம் திரும்பியது. ஆனால் அவர் வெறும் 3 பந்துகளை கூட தாக்குப் பிடிக்க முடியாமல் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதனால் தற்போது இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, இதில் ஸ்டார்க் மட்டுமே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.

Story first published: Sunday, March 19, 2023, 14:58 [IST]
Other articles published on Mar 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+