சிஎஸ்கே ரசிகர்களுக்கு நல்ல செய்தி.. எரிமலையாக வெடித்த ஜடேஜா.. கெத்து காட்டிய நடுவரிசை
தர்மசாலா: இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 7வது டி20 தொடரை இந்தியா வென்றது.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை இந்திய அணி தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் இல்ங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோர் அபாரமாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டனர்.

முன்னணி வீரர்கள்
இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர்களான கேஎல் ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தீபக் சாஹர் ஆகியோர் இல்லை. கிட்டதட்ட 2ஆம் தர இந்திய அணியே இந்தப் போட்டியில் களமிறங்கியது. இந்தப் போட்டியில் இலங்கை அணி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

ஸ்ரேயாஸ் ஐயர்
கேப்டன் ரோகித் சர்மா 1 ரன்னிலும்,இஷான் கிஷன் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில், விராட் கோலி இடத்தில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடினார். கடந்த தொடரில் சூரியகுமார் எப்படி விளையாடினாரோ, அதே போல் இம்முறை ஸ்ரேயாஸ் ரன்களை விளாசினார்.

சஞ்சு சாம்சன்
இதே போன்று சஞ்சு சாம்சன், தமக்கு கிடைத்த அரிய வாய்ப்டிப சிறப்பாக பயன்படுத்தி கொண்டார். முதலில் பொறுமையாக விளையாடினாலும், பின்னர் அதிரடியை காட்டி ரன்களை சேர்த்தார். 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களை சஞ்சு சாம்சன் விளாசினார். தொடர்ந்து இதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினால் டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு இடம் நிச்சயம்.

ஜடேஜா
காயம் காரணமாக 2 மாதமாக விளையாடாத ஜடேஜா, இன்று 5வது வீரராக பேட்டிங் வரிசையில் களமிறங்கினார். வந்து இறங்கியதும் பவுண்டரிகளை விளாசி தள்ளினார் ஜடேஜா,. 18 பந்துகளில் 45 ரன்களை விளாசிய ஜடேஜா, 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சரை அடித்தார். இதன் மூலம் ஜடேஜா ஃபார்ம்க்கு திரும்பியது தனிப்பட்ட முறையில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications