Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை கவனிச்சீங்களா? பிளேயிங் லெவனில் இந்தியா செய்த தவறு.. பேட்டிங் சிக்கலால் வந்த பிரச்சினை

அகமதாபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில் ஒரு தவறு செய்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. அகமதாபாத் ஆடுகளம் பேட்டிங் இருக்கு சாதகமாக உள்ளது.

இது போன்ற ஆடுகளத்தில் லெக் ஸ்பின்னர்கள் பந்து வீசும் போது நன்றாக பந்து திரும்பி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படும்.

ஆனால் தற்போது இந்திய அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தும் தங்களுக்கு தேவையான லேக் ஸ்பின்னரை சேர்க்க முடியாத நிலையில் இருக்கிறது.

அக்சர் vs ஜடேஜா

அக்சர் vs ஜடேஜா

இன்னும் சரியாக சொல்லப்போனால் இந்திய அணி ஒரே மாதிரி பந்து வீசும் இடது கை சுழற் பந்துவீச்சாளர்களை இருவரை தேர்வு செய்துள்ளது. ஒன்று ஜடேஜா, மற்றொருவர் அக்சர்பட்டேல். அக்சர்பட்டேல் மூன்று டெஸ்டிலும் சேர்த்து 39 ஓவர் தான் வீசி இருக்கிறார். ஆனால் ஜடேஜா மூன்றாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் மட்டும் 32 ஓவர்கள் வீசி இருக்கிறார்.இதன் மூலம் அக்சர்பட்டேல் போதிய அளவு பந்து வீசவுமில்லை , விக்கெட் வீழ்த்தவும் இல்லை என தெரிகிறது.

நீக்க முடியாத நிலை

நீக்க முடியாத நிலை

ஆனால் இந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்களில் அக்சர் பட்டேல் தான் முதலிடத்தில் இருக்கிறார். இதனால் அக்சர் பட்டேல் நன்றாக பேட்டிங் செய்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை அணியை விட்டு நீக்க முடியாத நிலையில் ரோகித் சர்மா இருக்கிறார்.

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தங்களுடைய பணியை சிறப்பாக செய்திருந்தால் அக்சர் பட்டேலுக்கு பதில் ரோகித் சர்மா, குல்திப் யாதவை சேர்த்திருக்கலாம்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஆனால் பேட்டிங் பலம் குறைந்துவிடும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த மாற்றம் செய்யப்படவில்லை. இதே போன்ற கடினமான ஆடுகளத்தில் சிறப்பாக பந்துவீசி குல்தீப் யாதவ் வங்கதேசத்துக்கு எதிராக ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். எனினும் அடுத்த டெஸ்ட் போட்டியில் அவருடைய இடம் காலியானது. எனினும் பார்டர் கவாஸ்கர் தொடரில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி டெஸ்டிலும் அவர் சேர்க்கப்படாதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

ஐடியா

ஐடியா

இதற்காகத்தான் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பதிலாக ஒருவரை பயன்படுத்திக் கொண்டு மற்றொருவருக்கு பதில் குல்தீப் யாதவை சேர்க்கலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் ஐடியா கொடுத்தார்கள். இந்த பிளானை வைத்து தான் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. ஆனால் ஆஸ்திரேலியா அணியில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இருக்கிறார். ஆனால் இந்திய அணியில் அப்படி யாரும் இல்லாதது அணியின் சமநிலையை பாதிக்க செய்தது.

Story first published: Thursday, March 9, 2023, 19:56 [IST]
Other articles published on Mar 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+