For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

121 ஆண்டுக்கால ரெக்கார்டை உடைக்குமா இந்தியா?லண்டன் ஓவலில் 4வது இன்னிங்ஸ் வெற்றிக்கரமான சேஸ் என்ன?

லண்டன் : 2023ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற 444 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்ட வேண்டும் என்றால் இந்திய அணி 121 ஆண்டுக்கால டெஸ்ட் சாதனையை இந்திய அணி முறியடிக்க வேண்டும்.

இங்கிலாந்து மைதானத்திலேயே ஒரு அளவுக்கு பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பது, ஓவல் மைதானம் தான். இங்கு, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் எடுத்தது. ஆனால், இந்திய அணி 296 ரன்கள் மட்டுமே எடுத்ததன் மூலம் 173 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் விளையாடியது.

India need to break 121 year old record at london oval to win wtc final

தற்போது ஆஸ்திரேலிய அணி 444 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது இன்னும் 110 முதல் 120 ஓவர் வரை எஞ்சி இருப்பதால், ஒரு ஓவருக்கு 4 ரன்கள் அடித்தால் இந்திய அணியால் வெற்றி பெற முடியும்.

ஆனால் லண்டன் ஓவல் மைதானத்தில் கடைசி இன்னிங்சில் அடிக்கப்பட்ட வெற்றிக்கரமான இலக்கே 276 ரன்கள் தான் என்பது சோகமான தகவல். அதுவும் இது 1902 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
அதன் பிறகு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இங்கு ஒரு முறை மட்டும் தான் 250 ரன்களுக்கு மேல் ஸ்கோர் அடிக்கப்பட்டது . அதுவும் 1963 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 253 ரன்கள் என்று இலக்கை துரத்தியது. இதே போன்று இந்திய அணி ஓவல் மைதானத்தில் அடித்த வெற்றிக்கரமான 4வது இன்னிங்ஸ் ஸ்கோர் என்றால், அது 173 ரன்கள் தான். இதுவும் 50 ஆண்டுகளுக்கு முன் நடந்து இருக்கிறது.

இப்படி வரலாறு இந்தியாவுக்கு எதிராக இருந்தாலும், ஒரு முறை மட்டும் இந்திய அணி, ஒரு மிகப் பெரிய சாதனை அருகே சென்றது. அதுவும் இந்த ஓவல் மைதானத்தில் தான். 438 ரன்கள் என்று இங்கிலாந்து நிர்ணயித்த இலக்கை, இந்திய அணி துரத்தியபோது, சுனில் கவாஸ்கர் இரட்டை சதம் விளாசி அசத்தியிருக்கிறார். அப்போது முதல் விக்கெட்டுக்கு 213 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்டது.

ஆனால் இந்திய அணி அந்த போட்டியில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி டிராவானது. இதேபோன்று 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கடைசி இன்னிங்ஸில் 464 ரன்கள் என்ற இலக்கை துரத்தியபோது 345 ரன்கள் வரை அடித்து தோல்வியை சந்தித்தது. இந்திய அணி, இந்தப் போட்டியில் வெலலவில்லை என்றால் கூட பரவாயில்லை, டிரா பெற்றாலே, கோப்பையை பகிர்ந்து கொள்ளலாம்.

Story first published: Saturday, June 10, 2023, 19:38 [IST]
Other articles published on Jun 10, 2023
English summary
India need to break 121 year old record at london oval to win wtc final 121 ஆண்டுக்கால ரெக்கார்டை உடைக்குமா இந்தியா?லண்டன் ஓவலில் 4வது இன்னிங்ஸ் வெற்றிக்கரமான சேஸ் என்ன?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+