For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித்தா இது..!! அட..!! ஆளே அடையாளம் தெரியல?? புது மாப்பிள்ளை போல் தயாரான ரோகித் சர்மா

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஹிட்மேன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் ரோகித் சர்மா

ரோகித் சர்மாவுக்கு கடந்த ஆண்டு இறுதியில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது

இதனால் ஜாலியாக இருந்த ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்க தொடருக்கு தயாராகும் போது காயம் ஏற்பட்டு தொடரிலிருந்து வெளியேறினார்

பி.சி.சி.ஐ.யின் கடிதம்

பி.சி.சி.ஐ.யின் கடிதம்

இதனையடுத்து முழு உடல் தகுதியை அடைவதற்காக ரோகித் சர்மா பயிற்சி மேற்கொண்ட வந்தார். அப்போது தான் பி.சி.சி.ஐ.யிலிருந்த ரோகித் சர்மாவுக்கு ஒரு அதிர்ச்சி கடிதம் வந்தது. அதில் ரோகித் சர்மாவின் உடல் பருமன் அதிகமாக இருப்பதால், அவர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ரோகித் சர்மா முயற்சி

ரோகித் சர்மா முயற்சி

இதனால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா, சவால்கள் எல்லாம் எனக்கு சமோசா சாப்பிட்ற மாதிரி என்று மனதில் உறுதி எடுத்து கொண்டு கடுமையான பயிற்சியை மேகொண்டார். ஜிம்மில் பாதி நாள், உடல் எடையை குறைப்பதற்கான டயட் என ரோகித் முயற்சி எடுத்தார்

ரோகித்தின் நியூ லுக்

ரோகித்தின் நியூ லுக்

தற்போது அந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ரோகித் சர்மா உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் ரோகித் சர்மா, தனது தாடியை வெட்டி, புது மாப்பிள்ளை போல் உள்ளார். புத்தாண்டை புதிய தோற்றத்துடன் தொடங்கியுள்ள ரோகித் சர்மா, தனது புகைப்படத்தை முகத்தை கொஞ்சம் மறைத்து பதிவிட்டுள்ளார்

முதல் வெற்றி

முதல் வெற்றி

இந்திய அணியின் ஓயிட் பால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மாவுக்கு 2022ஆம் ஆண்டு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பையை வெல்வதே ரோகித் சர்மாவின் முதல் குறிக்கோள். அதே போல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.சி.சி. உலகக் கோப்பை போட்டிக்கும் இந்திய அணியை தயார் செய்ய வேண்டும். அத்துடன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டி, ஐ.பி.எல் என இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.இதனால் ரோகித் சர்மாவுக்கு பொறுப்பு அதிகமாக உள்ளதால், அவர் நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியம். அந்த முதல் படியில் ரோகித் வென்றுவிட்டார்.

Story first published: Tuesday, January 11, 2022, 21:27 [IST]
Other articles published on Jan 11, 2022
English summary
India ODI Captain Rohit sharma new looks suprises fans ரோகித்தா இது..!! அட..!! ஆளே அடையாளம் தெரியல,,?? புது மாப்பிள்ளை போல் தயாரான ரோகித் சர்மா..
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+