Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஒரே ஒரு வீரருக்காக இவ்வளவு மாற்றமா?” இந்திய ஒருநாள் அணியை அறிவிப்பதில் குழப்பம்.. காரணம் என்ன?

மும்பை: ஒரே ஒரு வீரருக்காக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஒருநாள் அணியை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

Recommended Video

Rohit Sharma's injury status unclear, KL Rahul to lead in ODIs vs South Africa ? | Oneindia Tamil

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடுத்ததாக வரும் ஜனவரி 19ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடர் தொடங்கவுள்ளது.

டெஸ்ட் அணியை மட்டும் அறிவித்திருந்த பிசிசிஐ, ஒருநாள் போட்டிகளுக்கான அணியை மட்டும் இன்னும் அறிவிக்காமல் உள்ளது.

 இந்திய ஒருநாள் அணி

இந்திய ஒருநாள் அணி

இந்தியாவின் பிரபல உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இந்த தொடரை முழுவதுமாக பார்த்த பின்பு ஒருநாள் போட்டிகளுக்கான அணியை அறிவிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று அல்லது நாளைக்குள் தேர்வுக்குழு கூடி ஒருநாள் அணியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

மீண்டும் ஒத்திவைப்பு

மீண்டும் ஒத்திவைப்பு

இந்நிலையில் அது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கையில் தசைப்பிடிப்பு காரணமாக பெங்களூருவில் பயிற்சி பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை இன்னும் சீராகவில்லை என தெரிகிறது. எனவே இந்த வார இறுதி வரை ( டிசம்பர் 30, 31) அவரை உடல்நிலையை பார்த்துவிட்டு, அதன்பிறகு அணியை அறிவிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவசர ஆலோசனைக்கூட்டம்

அவசர ஆலோசனைக்கூட்டம்

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இந்திய அணிக்குள் அவசர ஆலோசனை நடந்துள்ளது. அதில் ரோகித் சர்மாவா ஒருவேளை உடற்தகுதி பெறவில்லை என்றால், கே.எல்.ராகுலை கேப்டனாக நியமித்துவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 19ம் தேதியன்று தான் தொடங்குகிறது. எனவே அதற்கு இன்னும் 3 வாரங்கள் இருப்பதால் அதற்குள் ரோகித் பூரண குணமடையலாம். அப்படியே ரோகித்தின் பெயர் அறிவிக்கப்பட்டாலும், ( Subject to fitness) என்ற முறையில் தான் சேர்க்கப்படுவார். எனவே கேப்டனாக ராகுலையும், அவருக்கு உறுதுணையாக விராட் கோலியை இருக்கும்படி கோரப்பட்டதாகவும் தெரிகிறது.

 சீனியர் வீரர்கள் இல்லை

சீனியர் வீரர்கள் இல்லை

ரோகித்தை தவிர்த்து மேலும் சில முக்கிய வீரர்களும் இடம்பெறுவதில் சிக்கல் உள்ளது. ஆல்ரவுண்டர்கள் அக்‌ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இதன் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அணிக்குள் வரவுள்ளார். இதே போல இளம் வீரர்கள் ருதுராஜ் கெயிக்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

Story first published: Tuesday, December 28, 2021, 13:14 [IST]
Other articles published on Dec 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+