Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: இந்திய ODI அணி அறிவிப்பு எப்போது? 2 மூத்த வீரர்களுக்கு ஓய்வு.. வெளியான முக்கிய அப்டேட்

மும்பை: 2026 புத்தாண்டு தொடங்கியவுடன் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணி எப்போது அறிவிக்கப்படும்? இந்திய ஒருநாள் அணியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும்? என்பது குறித்த சில தகவல்கள் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வெளியாகி உள்ளன.

ஜனவரி 11ம் தேதி இந்தியா - நியூசிலாந்து மோதும் ஒருநாள் தொடர் தொடங்குகிறது. ஆனால், பிசிசிஐ தரப்பில் இருந்து இன்னும் அணியை அறிவிக்கவில்லை. கிடைத்த தகவல்களின்படி, ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. குறிப்பாக, ஜனவரி 3 அல்லது 4ம் தேதிகளில் தேர்வுக்குழுவினர் இணைய வழி கூட்டம் நடத்தி, அணியை இறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

India ODI team squad announcement for New Zealand ODI Series 2026 Expected Date and Senior Players Return

இந்தியா - நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஒருநாள் அணிக்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வந்துவிடும். இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் ஜாம்பவான்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி உறுதியாக பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

பிப்ரவரி 7ம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை 2026 தொடருக்கு முன்பாக, இந்திய அணியின் சமநிலையை உறுதி செய்வதற்கு இந்த தொடர் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் எனவும், அவர்கள் இடத்தில் சர்வதேச போட்டிப் பயிற்சி பெறும் வகையில் சில டி20 அணி வீரர்களுக்கு ஒருநாள் தொடரில் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து ஒருநாள் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் பிரேஸ்வெல் கேப்டனாகவும், டி20 அணிக்கு மிட்செல் சான்ட்னர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டெவன் கான்வே, கிளென் பிலிப்ஸ் என முக்கிய வீரர்கள் அந்த அணியில் இடம்பெற்று உள்ளனர்.

இந்தியா தொடருக்கான நியூசிலாந்து ஒருநாள் அணி

மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவன் கான்வே, ஜாக் ஃபோல்க்ஸ், மிட்ச் ஹே, கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்

Story first published: Wednesday, December 31, 2025, 10:20 [IST]
Other articles published on Dec 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+