இன்று தொடங்குகிறது இந்தியா-மேற்கிந்திய தீவுகள் 2வது டெஸ்ட்.. காயத்தால் முரளி விஜய் விலகல்
கிங்ஸ்டன்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டன் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்திய அணி வீரர் முரளி விஜய் இதில் பங்கேற்கமாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இன்று கிங்ஸ்டனில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய தொடக்க வீரர் முரளி விஜய் ஆட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பந்து பட்டு காயம்
முதல் டெஸ்ட் போட்டியில் 7 ரன்னில் விஜய் அவுட் ஆனபோது, அவரது கட்டை விரலில் பந்து பட்டு காயம் ஏற்பட்டது. எனவே அவர் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. ராகுல்தான் அவருக்கு பதிலாக களத்தில் நின்றார்.
ராகுல் களமிறங்க வாய்ப்பு
காயம் இன்னும் குணமாகாத நிலையில் விஜய்க்கு பதில் ராகுலை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சிறந்த வீரர்
38 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள விஜய், 2637 ரன்கள் விளாசியுள்ளார். சராசரி ரன் குவிப்பு 40 என்ற அளவில் உள்ளது. 6 சதங்கள், 12 அரை சதங்களும் இதில் சேரும்.

தொடரை கைப்பற்றுமா
இன்று தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. டென் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.


Click it and Unblock the Notifications