For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தான் ஃபில்டிங் என்றாலே காமெடி தான்.. அல்வா கேட்சை மிஸ் செய்த வீரர்கள்.. ஒரே சிரிப்பலை!

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் செய்த பில்டிங் ஒன்று ரசிகர்களை சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் அணி கிரிக்கெட்டில் விளையாடுகிறது என்றால் அவர்கள் நிச்சயம் ஒரு பில்டிங்கை மிஸ் செய்வார்கள். அதனை சின்ன குழந்தை கூட பிடிக்கும் என்ற அளவுக்கு இருக்கும்.

India Pakistan match - Comedy Fielding by Pakistan fielders made serious mistake

ஆனால் ஏதேனும் ஒரு காமெடியை செய்து சொதப்பி விடுவார்கள். லொள்ளு சபா காமெடியை மிஞ்சும் அளவிற்கு பாகிஸ்தானின் பில்டிங் இருக்கும். குறிப்பாக அந்த வீரர் பிடிப்பார் என்று இவரும், இந்த வீரர் பிடிப்பார் என்று அவரும் நினைத்துக் கொண்டு பந்தை மிஸ் செய்வது என்பது அடிக்கடி நடக்கும் ஒன்று. இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கூட அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது.

பவர் பிளேவில் சுப்மன் கில்லும், ரோஹித் சர்மாவும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார்கள். இந்த ஜோடி பாகிஸ்தான் வேக பந்துவீச்சை சிதறடித்தது.குறிப்பாக கில் 10 பவுண்டரிகளையும் ரோகித் சர்மா ஆறு பவுண்டரிகள் நான்கு சிக்சர் என பட்டையைக் கிளப்பினார்கள்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் மட்டும் சிறப்பான பில்டிங்கை செய்திருந்தால் 48 ரன்களிலே இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்திருக்கும்.ஆட்டத்தின் 7.3 வது ஓவரில் நசிம் ஷா வீசிய பந்தை கில் அடித்தார்.அப்போது பந்து எதிர்பார்த்ததை விட நன்றாக எழும்பி டாப் எட்ஜ் ஆனது. அப்போது பாகிஸ்தான் வீரர்கள் இரண்டு பேர் ஸ்லிப்பில் இருந்தார்கள்.

இது ஈஸியான கேட்ச் ஆக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிஸ்வான் அந்த கேட்சை பிடித்து விடுவார் என முதல் ஸ்லிப்பில் நின்றவரும், இரண்டாவது ஸ்லிப்பில் நின்றவர் இப்திகார் பிடித்து விடுவார் என அவரும் நினைத்து மொத்தத்தில் மூன்று பேருமே பந்தை விட்டார்கள்.இதனால் பந்து பவுண்டரிக்கு சென்றது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதேபோன்று மேலும் இரண்டு பில்டிங் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர்.

Story first published: Sunday, September 10, 2023, 17:40 [IST]
Other articles published on Sep 10, 2023
English summary
India Pakistan match - Comedy Fielding by Pakistan fielders made serious mistake பாகிஸ்தான் ஃபில்டிங் என்றாலே காமெடி தான்.. அல்வா கேட்சை மிஸ் செய்த வீரர்கள்.. ஒரே சிரிப்பலை!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+