For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீடியோ: தந்தையான ஜஸ்பிரித் பும்ரா.. சகோதரனாக பரிசளித்த ஷாகின் அப்ரிடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

கொழும்பு: அண்மையில் ஆண் குழந்தைக்கு தந்தையான இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பாகிஸ்தான் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி பரிசு வழங்கிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இவரும் தொலைக்காட்சி தொகுப்பாளரான சஞ்சனா கணேசனும் காதலித்து சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த நிலையில், கடந்தாண்டு இறுதியில் சஞ்சனா கணேசன் கர்ப்பமானார். இந்த நிலையில் இவர்களுக்கு செப்.4ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

India Pakistan Match: Shaheen Afridi gave gift to Jasprit Bumrah on the joy of of him becoming a father and his first child

குழந்தை பிறப்பின் போது மனைவியுடன் இருப்பதற்காக நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இருந்து பும்ரா விலகினார். அதன்பின் குழந்தை பிறந்த நிலையில், அடுத்த 4 நாட்களில் இந்திய அணியுடன் பயிற்சியில் இணைந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா களமிறங்கினார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்து விளையாடிய போது, திடீரென கனமழை பெய்தது. மாலை 4.55 மணியளவில் தொடங்கிய மழை, இரவு 8 மணியாகியும் நிற்கவில்லை. இதன்பின் நடுவர்கள் சோதனை செய்து ஆட்டத்தை 9 மணிக்கு தொடங்கலாம் என்று ஆலோசித்த நிலையில் மீண்டும் மழை பெய்தது.

இதனால் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஓய்வறையில் இருந்த பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி இந்திய அணியின் பும்ராவை சந்தித்தார். அப்போது ஷாகின் அப்ரிடி, புதிதாக தந்தையான பும்ராவுக்கு அன்பு பரிசு ஒன்றை வழங்கினார். இதனால் நெகிழ்ச்சியடைந்த பும்ரா, ஷாகின் அப்ரிடிக்கு நன்றி கூறிச் சென்றார்.

இந்த வீடியோ பாகிஸ்தான் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் வீரர்கள் எதிரும் புதிருமாக இருந்து வந்த நிலையில், தற்போது இரு அணி வீரர்களும் சகோதரர்களாக அன்பை பரிமாறிக் கொள்வது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Sunday, September 10, 2023, 23:57 [IST]
Other articles published on Sep 10, 2023
English summary
India Pakistan Match: Pakistan Bowler Shaheen Afridi gave gift to Jasprit Bumrah on the joy of of him becoming a father and his first child.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+