Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி.. பிளேயிங் லெவனில் மாற்றம்.. தமிழக வீரருக்கு வாய்ப்பு

திருவனந்தபுரம் : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை பொங்கல் தினத்தன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்ற நிலையில் கடைசி போட்டி சம்பிரதாய ஆட்டமாகவே நடைபெறும். இதனால் இந்த தொடரில் இடம்பெறாத வீரர்களுக்கு நாளைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம்.

இதனால் பிளேயிங் லெவனில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். இந்தப் போட்டி முடிந்தவுடன், வரும் 18ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டி நடைபெறுகிறது.

தொடக்க ஜோடி

தொடக்க ஜோடி

இதனால் தொடர்ந்து 6 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாது என்ற காரணத்தால் நாளைய ஆட்டத்தில் சிலருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என தெரிகிறது. தொடக்க வீரர் சுப்மான் கில்லுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, இஷான் கிஷனுக்கு நாளைய ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கலாம்.

நடுவரிசை

நடுவரிசை

ரோகித் சர்மா, விராட் கோலிக்கு டி20 போட்டியில் ஓய்வு கிடைக்கும் என்பதால் , அவர்கள் நாளைய போட்டியில் களம் காண்பார்கள். இதே போன்று அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ்க்கு நடுவரிசையில் வாய்ப்பு கிடைக்கலாம். ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் தமிழக ஆல்ரவுண்டர் வாசிங்டன் சுந்தர் இடம்பெறலாம்.

வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சு

இதே போன்று பந்துவீச்சை பொறுத்த வரை முகமது ஷமிக்கு ஓய்வு கிடைக்கலாம். இல்லை உம்ரான், சிராஜ்க்கு பதில் ஆர்ஸ்தீப் சிங் அணிக்கு திரும்பலாம். சாஹல் காயம் குணமடையாததால், குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இருப்பார்.

 பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1. ரோகித் சர்மா, 2. சுப்மான் கில் / இஷான் கிஷன் . 3. விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, கேஎல் ராகுல் / ஸ்ரேயாஸ் ஐயர், 6, வாசிங்டன் சுந்தர், 7, அக்சர் பட்டேல், 8, ஆர்ஸ்தீப் சிங், 9, முகமது சிராஜ், 10, உம்ரான் மாலிக், 11, சாஹல் / குல்தீப் யாதவ்

Story first published: Saturday, January 14, 2023, 16:45 [IST]
Other articles published on Jan 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+