Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு 100வது டி-20... அதிகம் விளையாடியுள்ளது யார் தெரியுமா... வேறு யாராக இருக்க முடியும்!

Recommended Video

அதிக டி-20 விளையாடியுள்ளது யாராக இருக்க முடியும்!- வீடியோ

டெல்லி: அயர்லாந்துக்கு எதிராக நடந்த முதல் டி-20 போட்டிதான், இந்தியாவின் 100வது டி-20 போட்டியாகும். இந்திய அணியில் யார் அதிக டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது தெரியுமா. உங்களுடைய கெஸ்ஸிங் சரிதான்.

2006ல் இந்தியா தனது முதல் டி-20 போட்டியில் விளையாடியது. அயர்லாந்துக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்ததுதான் 100வது போட்டியாகும். முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, 100வது போட்டியிலும் வென்று அசத்தியுள்ளது.

100க்கும் மேற்பட்ட டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ள நாடுகளில் அதிக வெற்றி என்ற சாதனையும் இந்தியாவிடமே உள்ளது. 52 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. தென்னாப்பிரிக்கா 59, பாகிஸ்தான் 58ல் வென்றுள்ளது.

சரி மேட்டருக்கு வருவோம். இந்திய அணியில் அதிக டி-20 போட்டியில் விளையாடிய சாதனை மகேந்திர சிங் தோனியிடமே உள்ளது. அவர் இதுவரை 90 போட்டிகளில் விளையாடி, 1455 ரன்கள் எடுத்துள்ளார்.

கோஹ்லிக்கு 4வது இடம்

கோஹ்லிக்கு 4வது இடம்

அவருக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா 80ல் போட்டிகளில் 1949 ரன்களும், சுரேஷ் ரெய்னா 74 போட்டிகளில் 1509 ரன்களும் எடுத்துள்ளனர். கேப்டன் விராட் கோஹ்லி 58 போட்டிகளில் 1983 ரன்கள் எடுத்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் சாதனை

தினேஷ் கார்த்திக் சாதனை

முதல் டி-20 போட்டியில் விளையாடியவர்களில் தோனி, ரெய்னா, தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் ஆகியோர் மட்டுமே தற்போதைய இந்திய அணியிலும் உள்ளனர். இதில் தோனி மற்றும் ரெய்னா 100வது போட்டியிலும் விளையாடினர். முதல் டி-20 போட்டியின் ஆட்ட நாயகனாக தினேஷ் கார்த்திக், 100வது போட்டியில் விளையாடவில்லை.

முதல் வெற்றி

முதல் வெற்றி

2006 டிசம்பர் 1ம் தேதி நடந்த முதல் டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா விளையாடியது. அதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 100வது போட்டியில் அயர்லாந்தை 76 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மூன்றாவது வீரர்

மூன்றாவது வீரர்

சர்வதேச அளவில் பாகிஸ்தான் ஷாகித் அப்ரிதி 99 டி-20 போட்டிகளிலும், ஷோயப் மாலிக் 97 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். அதற்கடுத்த இடத்தில் 90 போட்டிகளுடன் தோனி உள்ளார்.

Story first published: Friday, June 29, 2018, 18:58 [IST]
Other articles published on Jun 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+