2022 டி20 உலககோப்பை.. இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? ஒரு கணிப்பு
மெல்போர்ன்: 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் அக்டோபர் 23ஆம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
Recommended Video
இதில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும். எந்த இடத்தில் யாருக்கு போட்டி என்று தற்போது பார்க்கலாம்.
பிளேயிங் லெவனில் 15 மெயின் வீரர்களாக இடம்பெற்றுள்ளவர்களை வைத்தே தேர்வு செய்யப்படும். இதனால் முகமது ஷமி, பிஸ்னாய் பிளேயிங் லெவனில் இடம்பெற மாட்டார்கள்.

டாப் 4 வீரர்கள்
கேஎல் ராகுல் இந்திய அணியின் துணை கேப்டன் என்று நியமிக்கப்பட்டுள்ளதால், இனி அவர் தான் தொடக்க வீரர் என்பது உறுதி ஆகி விட்டது. கேப்டன் ரோகித் சர்மா, அவருடைய ஜோடியாக இருப்பார். விராட் கோலி சதம் விளாசி தன்னுடைய பார்மை மீட்டதால், இனி அவர் தான் நம்பா 3. நம்பர் 4வது வீரராக பேட்டிங் வரிசையில் சூர்யகுமார் யாதவ் தான் செயல்படுவார்.

தினேஷ் அல்லது பண்ட்?
நம்பர் 5வது வீரராக பேட்டிங் வரிசையில் ஹர்திக் பாண்டியாவுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும். நம்பர் 6 தான் இப்போது பிரச்சினை, ரிஷப் பண்டா அல்லது தினேஷ் கார்த்திக்கா என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது. நியாயப்படி பார்த்தால், தினேஷ் கார்த்திக் தான் இடம்பெற வேண்டும். இதே போன்று நம்பர் 7வது வீரராக அக்சர் பட்டேல், ஜடேஜா இடத்தை நிரப்பிவிடுவார்.

பந்துவீச்சாளர்கள்
8வது வீரராக பேட்டிங்கை வலு சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் அஸ்வின் இருப்பார். இல்லையெனில் சாஹல் அணியில் இடம் பிடிப்பார். 9வது வீரராக ஹர்சல் பட்டேலுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும். அதற்கு காரணம் அவருடைய பேட்டிங். 10வது வீரராக புவனேஸ்வர் குமார், 11வது வீரராக பும்ரா இருப்பார்.

பிளேயிங் லெவன்
1, ரோகித் சர்மா, 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா, 6, தினேஷ் கார்த்திக் / ரிஷப் பண்ட், 7, அக்சர் பட்டேல் / தீபக் ஹூடா, 8, அஸ்வின் / சாஹல், 9, ஹர்சல் பட்டேல்/ ஆர்ஸ்தீப் சிங், 10, புவனேஸ்வர் குமார், 11, பும்ரா


Click it and Unblock the Notifications