Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அயர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் லெவன்.. நட்சத்திர வீரரின் வருகையால் 2 பேருக்கு ஆபத்து

மும்பை: அயர்ல்ந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி வரும் 26 மற்றும் 28ஆம் தேதி 2 டி20 போட்டிகள் தொடரில் மோதுகிறது.

இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஆகியோர் டெஸ்ட் அணிக்கு திரும்புவதால், இந்த தொடரில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் அல்லது இஷான் கிஷன் செயல்படுவார்கள்.

கேப்டன் ஆன ஹர்திக் பாண்ட்யா.. அறிமுகமாகும் அதிரடி வீரர்.. அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் போது 2 முறை காயம் ஏற்பட்டு, தென்னாப்பிரிக்க தொடரில் சேர்க்கப்படாத சூர்யகுமார் யாதவ், இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். ஐபில் தொடரில் கூட, சூர்யகுமார் யாதவ் 8 போட்டியில் விளையாடி 303 ரன்கள் சேர்த்தார். தற்போது அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் இணைந்துள்ளார்.

யாருக்கு ஆபத்து

யாருக்கு ஆபத்து

மேலும் சஞ்சு சாம்சனும் இணைந்துள்ளதால், இந்திய அணியின் நடுவரிசை பலமாக மாறியுள்ளது. இதனால் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பினால், அவருக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதே அணி தான் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் சில சீனியர் வீரர்களின் வருகையுடன் பங்கேற்கும்.

புதிய பயிற்சியாளர்கள்

புதிய பயிற்சியாளர்கள்

இதனால் டி20 உலகக் கோப்பை தொடருக்கு இங்கிலாந்து தொடர் பெரும் பயிற்சி களமாகவும், பிளேயிங் லெவனை தீர்மானிக்க வாய்ப்பாகவிம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண் செயல்பட உள்ளார், பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ், ஃபில்டிங் பயிற்சியாளராக முனிஷ் ஆகியோர் செயல்பட உள்ளனர்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

அயர்லாந்து தொடருக்கான உத்தேச அணி 1, இஷான் கிஷன், 2. ருத்துராஜ் கெய்வாட். 3, சூர்யகுமார் யாதவ், 4, சஞ்சு சாம்சன், 5, ஹர்திக் பாண்டியா, 6, தினேஷ் கார்த்திக், 7, அக்சர் பட்டேல். 8. புவனேஸ்வர் குமார், 9,ஹர்சல் பட்டேல், 10, அவேஷ் கான், 11, சாஹல்

Story first published: Thursday, June 16, 2022, 14:13 [IST]
Other articles published on Jun 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+