பிரிட்ஜ்டவுன் : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை பார்பிடாஸ் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி இந்த ஆட்டங்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணையில் யார் பிளேயிங் லெவனில் யார் இடம்பெறப் போகிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாமல் பலம் குன்றி இருந்தாலும் தற்போது அந்த அணியில் ஷிம்ரன் ஹேட்மயர் அணிக்கு திரும்பி இருக்கிறார். அவர் இந்தியாவுக்கு எதிராக 500 ரன்கள் எடுத்திருக்கிறார்.இதில்
இரண்டு சதங்களும் அடங்கும். மேலும் அந்த அணியை எப்போதுமே குறைத்து மதிப்பிடவே முடியாது.
இதனால் இந்திய அணி வீரர்கள் தங்களுடைய டாப் கேமை வெளிப்படுத்த வேண்டியது கடமையாகும். இந்திய அணியில் டாப் 3 வீரர்களாக ரோஹித் சர்மா, கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் இருப்பார்கள். தற்போது இந்திய அணியின் நடுவரிசையில் யார் விளையாட போகிறார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
சூரியகுமார் யாதவ் ஒரு நாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.இதை போன்று ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக இந்த அணியில் இடம் பெற்றிருக்கிறார்.மேலும் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது.
இதேபோன்று கீழ் வரிசையில் ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. எட்டாவது இடத்தில் அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம், ஒன்பதாவது இடத்தில் இந்திய அணி வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்யுமா இல்லை சாஹல் அல்லது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்குமா என்று தெரியவில்லை. பத்தாவது இடத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய சிராஜிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். 11ஆம் இடத்தில் உம்ரான் மாலிக் அல்லது ஜெய்தேவ் உனாட்கட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.