Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை ஆட்டத்தை ஆரம்பித்த இந்தியா.. பிளானை மாற்றிய கம்பீர் - சூர்யகுமார்.. பயிற்சி துவக்கம்

துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடருக்காக, இந்திய கிரிக்கெட் அணி துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) தனது முதல் பயிற்சி அமர்வில் பங்கேற்றது. எட்டு நாடுகள் பங்கேற்கும் இந்த மெகா தொடர், செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்குகிறது. இதில், நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் போட்டியில் செப்டம்பர் 10 ஆம் தேதி நடப்பு சாம்பியனான ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.

இந்திய அணியின் வீரர்கள் செப்டம்பர் 4 ஆம் தேதி துபாய்க்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பல முன்னணி வீரர்கள் ஏற்கனவே துபாயை அடைந்துள்ளனர். இது தொடர்பான தகவலின்படி, இந்திய அணி தனது முதல் பயிற்சியை துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி முதல் இரவு 9:30 மணி வரை மேற்கொண்டது.

India Prepares for Asia Cup 2025 First Practice Session in Dubai

வீரர்கள் வியாழக்கிழமை அன்று வெவ்வேறு குழுக்களாக துபாய்க்கு வந்து சேர்ந்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, குல்தீப் யாதவ், ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் ஏற்கனவே துபாயில் உள்ளனர். அவர்களுடன், அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

நேரடி பயணம்

வழக்கமாக பெரிய தொடர்களுக்கு முன்பு இந்தியாவில் ஆயத்தப் பயிற்சி முகாம் நடத்தப்படும். ஆனால், இந்த முறை பிசிசிஐ-யின் அறிவுறுத்தலின்படி, வீரர்கள் அனைவரும் நேரடியாக துபாயில் ஒன்று கூடினர். இது வீரர்களின் பயணக் களைப்பைக் குறைத்து, தொடருக்கு புத்துணர்ச்சியுடன் தயாராவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 8 முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, இந்த முறையும் கோப்பையை வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முனைப்பில் உள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தொடக்கமாகவும் இந்த ஆசியக் கோப்பை தொடர் அமைந்துள்ளது.

ஆசியக் கோப்பையில் இந்தியாவின் போட்டி அட்டவணை:

  • இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் - செப்டம்பர் 10
  • இந்தியா vs பாகிஸ்தான் - செப்டம்பர் 14
  • இந்தியா vs ஓமன் - செப்டம்பர் 19

யாருப்பா நீ? ஒரே ரெய்டில் 6 பேர் காலி.. மிரள வைத்த அஜித்.. பெங்களூரு புல்ஸை வீழ்த்திய யு மும்பா

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.

மாற்று வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரல்.

Story first published: Friday, September 5, 2025, 23:59 [IST]
Other articles published on Sep 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+