ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை: முதலிடத்தை தக்க வைத்தது இந்திய அணி
துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகிறது.
ஒருநாள் போட்டிகளின் அடிப்படையில் அணிகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி 122 புள்ளிகளுடன் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றால் 119 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கும். இந்தியா 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடரும்.
கடைசி 2 ஆட்டத்தில் இந்தியா வென்றால் புள்ளிகள் 123 ஆக உயரும். அப்படி நிகழ்ந்தால் ஆஸ்திரேலியாவின் புள்ளிகள் 114 ஆக குறையும். இங்கிலாந்து, இலங்கை அணிகள் 111 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளன.
Story first published: Tuesday, October 29, 2013, 11:00 [IST]
Other articles published on Oct 29, 2013


Click it and Unblock the Notifications