For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடர்ந்து நடக்குதுங்க... நிறுத்துற ஐடியா இல்லை... பிசிசிஐ பிடிவாதம்

ஐபிஎல் 2021 தொடர் கடந்த 9ம் தேதி துவங்கி தொடர்ந்து 25 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

Recommended Video

T20 World Cup 2021ல் முக்கிய முடிவுகளை எடுக்க BCCI முடிவு

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் ஐபிஎல் போட்டிகளை நிறுத்த வேண்டும் என்று வீரர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,00,000ஐ தொட்டுள்ள நிலையிலும் ஐபிஎல் போட்டிகளை நிறுத்தாமல் தொடர்வதில் பிசிசிஐ தீவிரமாக உள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

ஐபிஎல் 2021 தொடர் கடந்த 9ம் தேதி துவங்கி தொடர்ந்து 25 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. தினந்தோறும் ரசிகர்களுக்கு சிறப்பான கொண்டாட்டத்தை ஐபிஎல் கொடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பால் ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் இந்த போட்டிகள் நடந்து வருகின்றன. ஆயினும் வீட்டிலிருந்தே இதன் கொண்டாட்டத்தை ரசிகர்கள் அனுபவித்து வருகின்றனர்.

தொடரும் ஐபிஎல்

தொடரும் ஐபிஎல்

இந்நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு நாளில், 300,000 பேர் கொரோனாவால் கடந்த சில தினங்களில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,00,000ஐ தாண்டியுள்ளது. ஆயினும் ஐபிஎல் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து கோரிக்கை

தொடர்ந்து கோரிக்கை

ஐபிஎல் வீரர்கள் அஸ்வின், ஆடம் சம்பா உள்ளிட்டவர்கள் கொரோனா பீதி காரணமாக ஐபிஎல்லில் இருந்து முற்றிலும் விலகியுள்ளனர். தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஐபிஎல் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடமருந்தும் வைக்கப்பட்டு வருகிறது.

ஐபிஎல் அவசியம்

ஐபிஎல் அவசியம்

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை நிறுத்தாமல் தொடர்வதற்கு பிசிசிஐ புது விளக்கம் கொடுத்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் மக்கள் வெளியில் வராமல் இருப்பதற்கும் வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டாட்டத்தை அனுபவிப்பதற்கும் ஐபிஎல் சிறப்பாக உதவி செய்யும் என்று கூறியுள்ளது.

அதிகரிக்கும் பாசிட்டிவிட்டி

அதிகரிக்கும் பாசிட்டிவிட்டி

ஐபிஎல் போட்டிகள் இல்லையென்றால் மக்கள் மாஸ்க் அணியாமல் வீட்டிலிருந்து வெளியில் செல்வார்கள் என்றும் அதனால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் பிசிசிஐ மேலும் கூறியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் மூலம் மக்களிடம் பாசிட்டிவிட்டி அதிகரித்து காணப்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.

நிறுத்துவதால் என்ன பயன்?

நிறுத்துவதால் என்ன பயன்?

மேலும் ஐபிஎல் போட்டிகளின்மூலம் நாட்டிற்கு நிதியுதவியும் கிடைத்து வருவதை சுட்டிக் காட்டியுள்ள பிசிசிஐ, இந்த தொடரை நிறுத்துவதால் என்ன பயன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த புதன்கிழமை 3,293ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 4வது இடத்தில் இந்தியா உள்ளது.

Story first published: Friday, April 30, 2021, 16:07 [IST]
Other articles published on Apr 30, 2021
English summary
The league generates considerable money for the economy -BCCI sources
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+