Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீண்ட காலம் கழித்து கைகோர்க்கும் அஸ்வின், ஜடேஜா.. வெ.இண்டீஸ் டெஸ்டில் இடம் உறுதியா?

ராஜ்கோட் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் தொடங்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது.

அதில் நாளை களமிறங்க உள்ள இந்திய அணியின் விவரம் வெளியாகி உள்ளது. அதில் ப்ரித்வி ஷா தன் முதல் டெஸ்ட் போட்டியில் நாளை களமிறங்க உள்ளது உறுதியாகி உள்ளது.

இந்த உத்தேச அணியில் 12 வீரர்கள் விவரம் இடம் பெற்றுள்ளது. இதில் இருந்து தான் 11 பேர் நாளை களமிறங்குவார்கள்.

இந்த 12 பேர் அணியில் நீண்ட காலம் முதல் தர கிரிக்கெட்டில் ரன்கள் விளாசி விட்டு வாய்ப்புக்காக காத்திருந்து அணியில் இடம் பெற்ற மாயங்க் அகர்வாலுக்கு இடம் கிடைக்கவில்லை. அவர் முதல் போட்டியில் வேடிக்கை பார்க்க வேண்டியது தான்.

துவக்கம் யார்?

துவக்கம் யார்?

முன்னதாக துவக்க வீரர் ஷிகர் தவான், மற்றும் முரளி விஜய் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டனர். அவர்களுக்கு பதில் யார் இந்திய அணியில் துவக்க வீரர்களாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது, அதற்கு பதில் சொல்லும் வகையில் இந்திய அணியில் ப்ரித்வி ஷா மற்றும் ராகுல் பெயர் இடம் பெற்றுள்ளது. ப்ரித்வி ஷா தன் முதல் போட்டியில் ஆடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவரிசை அதேதான்

நடுவரிசை அதேதான்

மூன்றாவது இடத்திற்கு புஜாரா, அடுத்து வரிசையாக கோலி, ரஹானே ஆகியோர் எந்த மாற்றமும் இன்றி தொடர்கின்றனர். விக்கெட் கீப்பராக மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார் ரிஷப் பண்ட். சிறப்பு விக்கெட் கீப்பிங் பயிற்சி எல்லாம் பெற்றுவிட்டு வந்திருக்கிறார் இவர்.

பந்துவீச்சில் யார் யார்?

பந்துவீச்சில் யார் யார்?

சுழற்பந்துவீச்சுக்கு மூன்று வீரர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. அவர்கள் அஸ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப். நீண்ட காலம் கழித்து ஜடேஜா, அஸ்வின் இருவரும் மீண்டும் களத்தில் இணைந்து பந்து வீச உள்ளனர். நிச்சயம் இந்தியா மூன்று சுழற்பந்துவீச்சாளர்களோடு களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். எனவே, ஜடேஜா, அஸ்வின் களம் இறங்குவது கிட்டதட்ட உறுதி தான். வேகத்துக்கு ஷமி மற்றும் உமேஷ் யாதவ் இருக்கிறார்கள். 12வது வீரராக இருக்கும் ஷர்துல் தாக்குர் நாளை அணியில் ஆடுவது கடினமே.

12 இந்திய வீரர்கள் பட்டியல்

12 இந்திய வீரர்கள் பட்டியல்

இந்திய உத்தேச அணி : விராட் கோலி, லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முஹம்மத் ஷமி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர்.

Story first published: Wednesday, October 3, 2018, 16:48 [IST]
Other articles published on Oct 3, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+