இந்தியாவின் பெருமை, சாம்பியன் சிந்து.. ! தங்க மங்கையை வாழ்த்தி பாராட்டிய மோடி..!!
Recommended Video
டெல்லி: உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சிந்து, இந்தியாவின் பெருமை என்று பிரதமர் மோடியை வாழ்த்து கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் நடந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில், தரவரிசையில் 5வது இடத்தில் இருந்த சிந்து, 4வது இடத்தில் இருந்த ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை சந்தித்தார்.
நேர் செட் கணக்கில் வென்று உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்று அவர் வரலாறு படைத்தார். உலக பேட்மின்டனில் சிந்து கைப்பற்றிய 5வது பதக்கம் இது ஆகும்.

வரவேற்பு, நன்றி
தாயகம் திரும்பிய சிந்துவுக்கு டெல்லி விமான நிலையத்தில் சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும், நன்றி.
பெருமை கொள்கிறேன்
இன்னும் கடினமாக உழைத்து நாட்டுக்காக நிறைய பதக்கங்களை நிச்சயம் குவிப்பேன். இந்த வெற்றி நான் காத்திருந்து பெற்ற வெற்றியாகும். அதை நினைக்கையில், பெருமை கொள்கிறேன் என்றார்.
இந்தியாவின் பெருமை
அதன் பிறகு, சிந்து, தனது பயிற்சியாளர் கோபிசந்த் உடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சிந்து இந்தியாவின் பெருமை என்றும் அவர் வாழ்த்து கூறியுள்ளார்.
ரூ.10 லட்சம்
சந்திப்பில் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவையும் உடன் இருந்தார். தொடர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜூ ரூ. 10 லட்சம் மதிப்புள்ள காசோலையை சிந்துவுக்கு வழங்கினார். 1 மணி நேரம் நடைபெற்ற சந்திப்பில் இந்திய பேட்மின்டன் சங்கத் தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பயிற்சியாளர்கள் கோபிசந்த் மற்றும் கிம் ஜிஹியுன், சிந்துவின் தந்தை பி.வி. ரமணா ஆகியோர் உடன் இருந்தனர்.


Click it and Unblock the Notifications