Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆடுகளத்தில் தூங்கியதா இந்தியா.. முன்னாள் வீரர் சொன்னது அப்படியே நடந்துடுச்சுப்பா.. முழு விவரம்

மும்பை : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது டிராவை நோக்கி சென்று வருகிறது.

பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் 3 போட்டிகளும் மூன்று நாட்களில் முடிவடைந்துவிடுகிறது. இதனால் கடைசி டெஸ்ட்டி பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை எடுக்க தடுமாறி வருகின்றனர்.

இதனால் இந்த போட்டி 5 நாட்கள் முடிவடைந்தும், முடிவு தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், களத்தில் விளையாடும் பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடுவதில்லை.

422 பந்துகள்

422 பந்துகள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவஜா 180 ரன்கள் சேர்த்தாலும், இதற்கு அவர் 422 பந்துகளை எடுத்து கொண்டு ஆமை வேகத்தில் விளையாடினார். சுமார் பத்து மணி நேரத்திற்கு மேலாக உஸ்மான் கவஜா களத்திலேயே பாய் போட்டு தூங்கிவிட்டார் என்றே சொல்லலாம்.

கிண்டல்

கிண்டல்

ஆனால், கேமரான் கிரீன் ஒரு அளவிற்கு வேகமாக 170 பந்துகளை எதிர் கொண்டு 114 ரன்கள் எடுத்தார். இது குறித்து கருத்து அஜித் அகர்கர் தற்போது இந்தியா உள்ள நிலை இந்தியாவுக்கு மகிழ்ச்சியே கொடுக்கும் என்று சுட்டிக்காட்டினார். . இன்று இந்திய வீரர்கள் ஆடுகளத்திற்கு வந்து படுத்து தூங்கி விடுங்கள் என்று கிண்டல் செய்தார். கவாஜா அப்படி தான் செய்ததாகவும், தாங்களும் அப்படியே செய்யுங்கள் என்று அவர் கூறி இருந்தார்.

ஆடுகளம்

ஆடுகளம்

மேலும் ஆடுகளம் அபாயகரமாக இல்லை என்பதால் இந்திய வீரர்கள் தைரியமாக விளையாடி ரன்கள சேர்க்கலாம் என்று அறிவுறுத்தி இருந்தார். முன்னாள் கேப்டன் கங்குலியும் அப்படி ஒரு ஸ்ட்மெண்டை தான் கூறி இருந்தார். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கலாம் என்று கூறி இருந்தார்.

253 ரன்கள்

253 ரன்கள்

ஆனால் இந்திய வீரர்கள் யாரும் பெரிய அளவில் பார்மில் இல்லை. இதனால் அடித்து ஆட கொஞ்சம் தடுமாறினார்கள். இன்று 90 ஓவர்களை எதிர்கொண்டு 253 ரன்களை சேர்தது வெறு 3 விக்கெட்டை மட்டுமே தான் இழந்தார்கள். இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற விளையாட்டு தான் என்றாலும், கூடுதலாக ஒரு 50 , 60 ரன்கள் இன்றைய ஆட்டத்தில் சேர்த்திருந்தால், இந்திய அணி வெற்றி பெற முயற்சி செய்து இருக்கலாம். இதனால் இந்திய அணி கிடைத்த வாய்ப்பை வீணடித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

Story first published: Saturday, March 11, 2023, 19:38 [IST]
Other articles published on Mar 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+