தொடக்கத்தில் அதிரடி.. பிறகு சறுக்கல்.. இறுதியில் ஜடேஜா காட்டு அடி.. கௌரவ இலக்கை எட்டிய இந்தியா
எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து இதுவரை 3 டி20 போட்யில் விளையாடி , மூன்று போட்டியிலும் வென்றது.
முதல் டி20 போட்டியை இங்கிலாந்து அணி தோற்றதால், அந்த அணிக்கு இன்றைய போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கோலி, ஜடேஜா, ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

அதிரடி பவர்பிளே
தொடக்க வீரராக விளையாடிய ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட பண்ட், 4 பவுண்டரி மற்றும் 1 இமாலய சிக்சரை ரிஷப் பண்ட் விளாசினார். ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 20 பந்துகளில் 31 ரன்களை ரோகித் சர்மா விளாசினார். இதில் மூன்று பவுண்டர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.இதன் மூலம் பவர்பிளேவில் இந்திய அணி 61 ரன்களை குவித்தது.

ஏமாற்றிய நடுவரிசை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோல 1 ரன்னில் வெளியேறினார். கோலி அவுட்டானதும். சூர்யகுமார் யாதவ் பவுண்டரிகளை விளாசினாலும் 15 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 12 ரன்களிலும் வெளியேறினார். இதனால் இந்திய அணி 89 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்திய அணி கட்டமைப்பு
இதனையடுத்து, ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக், ஜடேஜா ஆகியோர் பொறுமையாக விளையாடி விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடினர். தினேஷ் கார்த்திக் 17 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்து, முக்கிய கட்டத்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார். ஹர்சல் பட்டேல் 6 பந்துகளில் 13 ரன்கள் விளாசினார்.

ஜடேஜா அபாரம்
இறுதியில் சிஎஸ்கே வீரர் ஜடேஜா, தனது வழக்கமான தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 29 பந்துகளில் 46 ரன்கள் விளாசிய ஜடேஜா, இதில் 5 பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 170 ரன்கள் எடுத்தது. 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜேசன் ராய் முதல் பந்திலேயே அவுட் ஆனார்.


Click it and Unblock the Notifications