Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்காவை ஓட விட்ட இந்தியா.. சிக்சர்களை பறக்க விட்ட இளம் படை.. இது வேற லெவல் பேட்டிங்

டெல்லி: தென்னாப்பிரிக்காக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வீரர்கள், ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டினர்.

கேப்டனாக முதல் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்கினார். 3 ஆண்டுகளுக்கு பிறகு தினேஷ் கார்த்திக்கும், பல போட்டிகளுக்கு பிறகு ஹர்திக் பாண்டியாவும் களமிறங்கினர்.

தென்னாப்பிரிக்க அணி கேசவ் மகராஜ் மற்றும்தப்ரைஸ் சாம்ஷியை வைத்து களமிறங்கியது. இதனால் முதல் ஓவரிலேயே கேசவ் மகராஜை வைத்து முதல் ஓவரை பெவுமா வீசினார்.

அதிரடி பவர்பிளே

அதிரடி பவர்பிளே

சுழற்பந்துவீச்சில் இந்திய வீரர்கள் திணறுவார்கள் என எதிர்பார்த்த பெவுமாக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதல் ஓவரில் 13 ரன்கள் அடிக்கப்பட்டது. இதனால், சுழற்பந்துவீச்சை மாற்றி வேகப்பந்துவீச்சாளர்களை பெவுமா அழைத்தார். முதலில் இருவரும் தடுமாறினாலும், பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ருத்துராஜ், சிக்சர்களை விரட்டினார். மறுபக்கம் பவுண்டரிகளை இஷான் கிஷன் விளாசியதால், பவர் பிளேவில் இந்திய அணி 51 ரன்கள் அடித்தது.

பறந்த சிக்சர்கள்

பறந்த சிக்சர்கள்

ருத்துராஜ் அடித்த 23 ரன்களில் 3 சிக்சர்கள் அடங்கும். இதன் பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும், தொடக்கம் முதலே தனது அதிரடியை காட்டினார். குறிப்பாக சுழற்பந்துவீச்சை சிக்சருக்கு பறக்கவிட்டார்.மறுபக்கம், இஷான் கிஷன் அதிரடியை காட்ட 37 பந்தில் இஷான் கிஷன் அரைசதம் விளாசினார். இதன் மூலம் 9.4வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை தொட்டது.

மாஸ் காட்டிய கிஷன்

மாஸ் காட்டிய கிஷன்

தொடர்ந்து சிக்சர்களை விளாசிய இஷான் கிஷன் 48 பந்துகளில் 76 ரன்கள் அடித்தார். இதில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர் அடங்கும். ஸ்ரேயாஸ் ஐயரும் 27 பந்துகளில் 36 ரன்கள் விளாசினார். இதன் பின்னர், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் ஹர்திக் பாண்டியா மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் 2 சிக்சர், 2 பவுண்டரிகளை அடிக்க 29 ரன்களில் வெளியேறினார்.

ஹர்திக் சரவெடி

ஹர்திக் சரவெடி

இதன் பின்னர் DK.. DK.. என்று ரசிகர்களின் உற்சாக குரலுக்கு நடுவில் தினேஷ் கார்த்திக் களத்துக்கு வந்தார். எனினும் மறுமுனையில் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் ஒரு காட்டு காட்டினார். வீசிய பந்துகள் எல்லாம் பவுண்டரி, சிக்சர் என பறந்தது. 3 சிக்சர், 2 பவுண்டரி என ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 211 ரன்களை எடுத்தது. இது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 போட்டியில் இந்தியா அடித்த அதிகபட்ச ஸ்கோராகும்.

Story first published: Thursday, June 9, 2022, 21:16 [IST]
Other articles published on Jun 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+