For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடித்து நொறுக்கிய சூர்யகுமார்.. 18 பந்தில் அரைசதம்.. இந்தியா இமாலய இலக்கு.. பந்துவீச்சில் திணறிய SA

கவுகாத்தி : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 18 பந்தில் அரைசதம் விளாசினார். இது அவருக்கு ஹாட்ரிக் அரைசதமாகும்.

Recommended Video

IND vs SA 2nd T20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

கவுகாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஏற்கனவே முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், இன்றைய ஆட்டத்தில் வென்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை முதல் முறையாக சொந்த மண்ணில் வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியது.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்கத்தில் சில பந்தில் அமைதி காத்தாலும், பிறகு அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கேஎல் ராகுல் பவுண்டரி களை விரட்டி ரன்களை குவித்தார். இதே போன்று ரோகித் சர்மாவும் தனது 400வது டி20 போட்டியில் பட்டையை கிளப்பினார். இந்திய அணி பவர்பிளே முடிவில் 57 ரன்கள் சேர்த்தது. 37 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 43 ரன்களை விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.

ராகுல் அரைசதம்

ராகுல் அரைசதம்

ராகுல் ஸ்ட்ரைக் ரேட் விமர்சனத்துக்கு ஆளான நிலையில், இன்று தனது பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்தார். 5 பவுண்டரிகள், 4 சிக்சர் அடித்த ராகுல் 24 பந்தில் அரைசதம் கடந்தார். ராகுல் 57 ரன்கள் எடுத்த நிலையில், எல்பிடபிள்யூ ஆனார். இதனையடுத்து விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஜோடி சேர்ந்து தென்னாப்பிரிக்க பந்துவீச்சை மைதானத்தில் சிதற அடித்தனர்.

சூர்யகுமார் அரைசதம்

சூர்யகுமார் அரைசதம்

குறிப்பாக ரபாடா வீசிய பந்துகளை முன் கூட்டியே கணித்து பின்னால் தூக்கி அடித்து ஒரே ஓவரில் 22 ரன்களை குவித்தார். அத்துடன் நிறுத்தாமல் சூர்யகுமார் வீசிய பந்தை எல்லாம் சிக்சருக்கு விரட்ட, அவர் 18 பந்துகளில் அரைசதம் கடந்தார். மறுமுனையில் விராட் கோலியும் தனது பழைய அதிரடியை காட்டி ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தார். சூர்யகுமார் 22 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

கடைசி ஓவரில் விளையாடிய தினேண் கார்த்திக் சிக்சர், பவுண்டரி என விளாசி 7 பந்துகளில் 17 ரன்கள் அடித்தார்.விராட் கோலி 28 பந்தில் 49 ரன்கள் அடிக்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. நடப்பாண்டில் மட்டும் இந்தியா 5வது முறையாக டி20 போட்டியில் 200 ரன்களை கடந்தது. கடைசி 5 ஓவரில் மட்டும் 82 ரன்கள் இந்தியா எடுத்தது.

Story first published: Sunday, October 2, 2022, 21:14 [IST]
Other articles published on Oct 2, 2022
English summary
India set 238 runs as target vs south Africa in 2nd t20 அடித்து நொறுக்கிய சூர்யகுமார்.. 18 பந்தில் அரைசதம்.. இந்தியா இமாலய இலக்கு.. பந்துவீச்சில் திணறிய SA
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+