
இந்தியா தடுமாற்றம்
தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரல் முன்னாள் கேப்டன் விராட் கோலி டக் அவுட்டாக இந்தியாவுக்கு ஆரம்பே அதிர்ச்சியாக அமைந்தது. ஷிகர் தவான் 10 ரன்களில் வெளியேற, இந்திய அணி 42 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

ரிஷப் அரைசதம்
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 6 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசி 54 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் வால்ஸ் பந்துவீச்சில் சாய்ஹோப்பிடம் ரிஷப் பிடிப்பட்டார்.

ஸ்ரேயாஸ் ஐயர்
மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 74 பந்துகளில் அரைசதம் கடந்தார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட போது அவர் 80 ரன்களில் நடையை கட்டினார். அவரது இன்னிங்சில் 9 பவுண்டரிகள் அடங்கும். ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து இந்தியா மீண்டும் தடுமாறியது.

266 ரன்கள் இலக்கு
இறுதியில் தீபக் சாஹர், வாசிங்டன் சுந்தர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.தீபக் சாஹர் 38 ரன்களும், வாசிங்டன்சுந்தர் 33 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 265 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


Click it and Unblock the Notifications











