Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீஸ் அணியை பொளந்த இந்தியா.. ஹர்திக் பேய் அடி.. பறந்த சிக்சர்கள்.. 352 ரன்கள் இலக்கு

டிரிண்டாட் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 352 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்த தொடர் சமனில் உள்ள நிலையில் மூன்றாவது போட்டியில் யார் வருகிறார்களோ அவர்களுக்கு கோப்பை கிடைக்கும்.

வெஸ்ட் இண்டீஸ்யிடம் இந்திய அணி கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் எந்த ஒரு நாள் தொடரையும் இழந்ததில்லை.இந்த சாதனையை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி களமிறங்கியது.

 India set 352 runs as target for west indies to win the series

எனினும் இதில் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா,விராட் கோலி ஆகியோர் இல்லாததால் இந்திய அணி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி அதற்கு பழித் தீர்க்கும் வகையில் இன்றைய ஆட்டத்தில் விளையாடினார்கள். இளம் கன்று பயம் அறியாது என்பதற்கு போல் இந்த ஆட்டத்தில் இளம் வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தனர்.

இதற்கு இசான் கிஷன் பிள்ளையார் சுழி போட, கில் தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 64 பந்துகளில் 77 ரன்கள் விளாசிய இசான் கிஷன், 8 பவுண்டரிகளையும் மூன்று சிக்ஸர்களையும் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 143 ரன்களை குவித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே அணியின் ருதுராஜ் 8 ரன்கள் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதனை அடுத்து கில்லுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்து அதிரடியை காட்டினார்கள். சாம்சன் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய பொறுப்பில் இருந்ததால் அவர் சிக்ஸர்களாக அடித்தார். 4 சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் என 41 பந்தில் 51 ரன்களை சஞ்சு சாம்சன் குவித்தார். கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளாக தடுமாறிய ஹர்திக் பாண்டியா இன்று தன்னுடைய திறமையை நிரூபித்து காட்டினார்.

இறுதியில் களம் இறங்கினாலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நாக் அவுட் பஞ்சை ஹர்திக் பாண்டியா தான் வைத்தார். 45 பந்துகளில் 50 ரன்கள் ஹர்திக் பாண்டியா கடந்தார். அதன் பிறகு அடுத்த ஏழு பந்தில் 20 ரன்கள் ஹர்திக் அடித்தார். இதனால் 52 பந்துகளை எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியா 70 ரன்களை குவித்தார். இதில் 5 சிக்சர்களும் நான்கு பவுண்டர்களும் அடங்கும். இதேபோன்று சூரியகுமார் யாதவும் இன்றைய ஆட்டத்தில் இரண்டு பவுண்டர்கள் இரண்டு சிக்சர்கள் என 30 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 351 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

Story first published: Tuesday, August 1, 2023, 23:20 [IST]
Other articles published on Aug 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+