Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாண வேடிக்கை காட்டிய சுப்மன் கில்.. 3வது ஒருநாள் போட்டி.. ஜிம்பாப்வே அணிக்கு 290 ரன்கள் இலக்கு!

ஹராரே: ஜிம்பாப்வே அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.

Recommended Video

IND vs ZIM இந்திய வீரர் Shubman Gill சதம் அடித்து அசத்தல் *Cricket

இரு அணிகளும் மோதும் 3வது ஒருநாள் போட்டி ஹராரேவில் உள்ள மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய அட்டகாசமான பேட்டிங்கை செய்தது.

 ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள்

ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள்

ஓப்பனிங் வீரர் ஷிகர் தவான் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் முதல் விக்கெட்டிற்கு 63 ரன்கள் சேர்த்து அடித்தளம் அமைத்தனர். சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் 40 ரன்களும், கே.எல்.ராக்ல் 30 ரன்களிலும் அவுட்டாகினர். இதன் பின்னர் வந்த இளம் வீரர் சுப்மன் கில் வானவேடிக்கை காட்டினார்.

அட்டகாச சதம்

அட்டகாச சதம்

97 பந்துகளை சந்தித்த சுப்மன் கில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 130 ரன்களை விளாசினார். அவருடன் சேர்ந்து அதிரடி காட்டிய 61 பந்துகளில் 50 ரன்களை குவித்து வெளியேறினார். இவர்களின் பார்ட்னர்ஷிப்பால் 84 - 2 என்ற நிலையில் இருந்த இந்திய அணி 224 - 3 என வலுவடைந்தது.

 மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டரில் களமிறங்கிய வீரர்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. தீபக் ஹூடா (1), சஞ்சு சாம்சன் (15), அக்‌ஷர் பட்டேல் (1) என அடுத்தடுத்து வெளியேறினர். டெயில் எண்டர்களும் சொதப்ப 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்களை குவித்தது.

ராகுல் ஏமாற்றம்

ராகுல் ஏமாற்றம்

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி முதல் 2 போட்டிகளில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இன்றும் கடின இலக்கை நிர்ணயித்துள்ளதால், தொடரை வைட் வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் 30 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றினார்.

Story first published: Monday, August 22, 2022, 17:52 [IST]
Other articles published on Aug 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+