Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் அபார பந்துவீச்சு.. இந்திய பவுலர்கள் புது சாதனை.. பாக் 147 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

துபாய் : ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி கடும் நெருக்கடி அளித்தனர்.

Recommended Video

IND vs PAK இந்திய அணி பந்துவீச்சில் மிரட்டல் சுருண்ட Pakistan

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கும், அஸ்வினுக்கு பதிலாக ஆவேஷ் கானும் சேர்க்கப்பட்டனர்.

டி20 உலகக் கோப்பையில் 9 மாதத்திற்கு பிறகு அடைந்த தோல்விக்கு பதிலடி தரும் வகையில் இந்திய அணி வீரர்கள் செயல்பட்டனர்.

பரபரப்பான முதல் ஓவர்

பரபரப்பான முதல் ஓவர்

முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இதில் முகமது ரிஸ்வானுக்கு இன்ஸ்விங் பந்தை புவனேஸ்வர் குமார் வீச, முகமது ரிஸ்வானுக்கு எல்பிடபிள்யூ தரப்பட்டது. ஆனால், அவர் டிஆர்எஸ் மூலம் நாட் அவுட் என வழங்கப்பட்டது.. இதனைத் தொடர்ந்து முதல் ஓவரின் கடைசி பந்திலும் ரிஸ்வானை ஆட்டமிழக்க வைக்க, ஒரு ரிவியூவை இந்தியா வீணடித்தது.

பாபர் அசாம் அவுட்

பாபர் அசாம் அவுட்

இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து கட்டுக்கோப்பாக பந்துவீசினர். இதனால், ஆட்டத்தின் டாட் பால் அதிகரித்தது. இதனையடுத்து புவனேஸ்வர் குமார் வீசிய ஷாட் பாலை அடிக்க முயன்ற பாபர் அசாம் , 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பாகிஸ்தான் 15 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது.

தடுமாறிய பாகிஸ்தான்

தடுமாறிய பாகிஸ்தான்

இதனையடுத்து ஃபக்கர் ஷமானும் அதிரடியாக ஆட முற்பட ஆவேஷ் கான் வீசிய ஷாட் பந்தில் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஸ்வானும், இஃப்திகார் அகமதும் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தனர். இருப்பினும் ஹர்திக் பாண்டியா வீசிய ஷாட் பந்தில் இருவரும் ஆட்டமிழந்தனர். இதனால் 97 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டை பாகிஸ்தான் தடுமாறியது.

இந்தியா சாதனை

இந்தியா சாதனை

இதே போன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் ஆசிஃப் அலி 9 ரன்களில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில் கேட்ச் ஆனார். முகமது நவாஷ் 1 ரன்னில் வெளியேற, இறுதியில் ஷதாப் கான் 10 ரன்கள் சேர்த்து புவனேஸ்வர் குமார் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். கடைசி 2 ஓவரில் பாகிஸ்தான் அணி 23 ரன்கள் எடுத்தது. தஹானி 2 சிக்சர் விளாச, அந்த அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக அனைத்து 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர். புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Story first published: Sunday, August 28, 2022, 21:43 [IST]
Other articles published on Aug 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+