
யாருக்கு வாய்ப்பு
இதே போன்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா, கிரிக்கெட் களத்திற்கு திரும்ப 3 மாதங்கள் ஆகும் என்பதால், அவர், உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் மற்றும் தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி மெயின் அணியில் இடம்பெறாமல் ரிசர்வ் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்.

ரசிகர்கள் விமர்சனம்
கடந்த சில டி20 போட்டிகளாக சரி வர விளையாடாத ரிஷப் பண்ட் அணியில் நீடிக்கிறார். இந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்களும், விமர்சகர்களும் அணி தேர்வு குறித்து பல விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். முகமது ஷமியை மெயின் அணிக்குள் சேர்க்காமல் இருப்பது, சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது ஏன் என்றும் பல கேள்விகளை ரசிகர்களை முன் வைத்துள்ளனர்.

மாற்றங்களுக்கு வாய்ப்பு
இந்த நிலையில் தான், பிசிசிஐ அறிவித்துள்ள டி20 உலகக் கோப்பை அணி என்பது இறுதி அணி கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அணி அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காக தான், அவசரம், அவசரமாக இந்த அணி அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு இறுதி அணியில் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டிலும் மாற்றம்
கடந்த டி20 உலகக் கோப்பையின் போது இப்படி தான் அக்சர் பட்டேலை வைத்து கடைசி நேரத்தில் ஒரு மாற்றம் நிகழ்த்தப்பட்டது. முதலில் அறிவிக்கப்பட்ட மெயின் அணியில் அக்சர் பட்டேலும், ரிசர்வ் அணியில் சர்துல் தாக்கூரும் இருந்தனர். ஆனால், டி20 உலககோப்பை தொடர் தொடங்கும் சில நாட்களுக்கு முன்பு அக்சர் பட்டேல் ரிசர்வ் அணிக்கும், ஷர்துல் தாக்கூர் மெயின் அணிக்கும் மாற்றப்பட்டார். இதே போன்று இம்முறையும், முகமது ஷமி மெயின் அணிக்கு மாற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications