கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளரை வைத்து களமிறங்கியபோதே ஆடுகளம் குறித்து சந்தேகம் இருந்தது.
தற்போது ரோகித் சர்மா நினைத்தது போலவே ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. குறிப்பாக பந்து எதிர்பார்த்ததை விட நன்றாக திரும்பி பேட்ஸ்மேனுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.

சில பந்துகள் பவுன்ஸ் குறைவாக இருந்தது. இது பேட்ஸ்மன்களுக்கு ரன் சேர்க்க முடியாத சூழல் இருந்தது. இந்த நிலையில் இந்தியாவிடமும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் இலங்கையை சுருட்டி விடலாம் என ரோகித் சர்மா நினைத்தார். 200 ரன்னுக்கு மேல் அடித்தால் கூட இலங்கைக்கு கடும் நெருக்கடி கொடுக்க முடியும் என ரோகித் சர்மா திட்டம் போட்டு இருக்கிறார்.
குறிப்பாக கடந்த போட்டியில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்ட நிலையில் அவர் இந்த ஆடுகளத்தில் விக்கெட் வேட்டையை ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மழை தற்போது பெய்து வருவதால் ஆட்டம் தடைப்பட்டு இருக்கிறது. இதனால் மீண்டும் ஆட்டம் தொடங்கியவுடன் ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கும் என்பதால் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் நீடிக்காது என கூறப்படுகிறது.
குறிப்பாக மைதானம் ஈரமாக இருப்பதால் பந்து நனைந்து சுழற் பந்துவீச்சாளர்கள் பந்தை திருப்ப முடியாத அளவுக்கு சூழல் மாறிவிடும். இதனால் இலங்கை அணி வீரர்கள் செயல்பட்டதை போல இந்தியாவின் சுழற் பந்துவீச்சாளர்களால் செயல்பட முடியாது. இது இலங்கைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திவிடும். எனினும் காற்றில் ஈரப்பதம் இருப்பதால் பும்ரா, முஹம்மது சிராஜ், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் பந்தை ஸ்விங் செய்ய வாய்ப்பு இருக்கிறது.
இந்தியா ஒரு 15 ஓவர் வரை வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து தாக்கு பிடித்து விட்டால் அதன் பிறகு மைதானத்தில் உள்ள ஈரப்பதம் காய வாய்ப்பு உள்ளது. இதனால் நேற்றைய ஆட்டத்தில் எவ்வாறு குல்தீப் யாதவ் 12 ஓவருக்கு மேல் பந்து வீசி பாகிஸ்தானுக்கு நெருக்கடி எப்படி கொடுத்தாரோ அதேபோல் இலங்கைக்கும் இன்று நெருக்கடி கொடுக்கும் முடியும். ஆனால் முதல் 10 ஓவரில் இந்தியா இலங்கையில் கட்டுப்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும். இலங்கை விளையாடிய கடந்த 13 சர்வதேச ஒரு நாள் போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.