Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் முதலில் இருந்தா ? ரசிகர்களை ஏமாற்றிய கோலி, தவான்.. ஏன் இந்த சொதப்பல் !

டாக்கா : வங்கதேசத்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.

விராட் கோலி, டி20 உலக கோப்பையில் பார்ம்க்கு திரும்பிய நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டிலுத் தனது ஆதிக்கத்தை செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் வங்கதேச தொடர் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ரோகித் சர்மா காயம் காரணாக பேட்டிங் செய்யவில்லை.

ராகுல் முடிவு

ராகுல் முடிவு

இதனையடுத்து தொடக்க வீரராக விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். என்ன காரணத்திற்காக தெரியவில்லை. தொடக்க வீரராக அறியப்படும் ராகுல், தேவைப்பட்ட சூழலில் அந்த இடத்திற்கு வந்து விளையாடவில்லை. விராட் கோலி அதிரடியாக பவுண்டரி விளாசினார்.

கோலி அவுட்

கோலி அவுட்

எனினும் எபதாட் ஹூசைன் பந்தின் பவுண்சை கணிக்க தவறிய விராட் கோலி போல்ட் ஆகி 5 ரன்களில் வெளியேறினார். அனுபவ வீரர் ணிகர் தவான் இந்திய அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவரும் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் அணியில் அவருடைய இடம் கேள்விக்குறியாகி வருகிறது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்தனர். ஆனால், அவரும் ரசிகர்களை ஏமாற்றினார். 28 பந்துகளை எதிர்கொண்ட அவர் 14 ரன்கள் மட்டுமே சேர்த்தார். வாசிங்டன் சுந்தர் 11 ரன்களில் வெளியேற , இந்திய அணி தடுமாறி வருகிறது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

பேட்டிங்கில் ஒரு அணியின் முக்கிய வீரர்கள் 3 பேரும் சொதப்பினால், அந்த அணி வெற்றி பெறுவது மிகவும் கடினம் ஆகும். வங்கதேசத்திற்கு எதிராக கூட இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்புவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இதற்கு இளம் வீரர்களை அனுப்பி வைத்திருந்தாலே , அவர்களாவது வென்று இருப்பார்கள்.

Story first published: Wednesday, December 7, 2022, 19:59 [IST]
Other articles published on Dec 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+