வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் - இந்தியா தடுமாற்றம்

இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடர் சிட்டகாங்கில் இன்று தொடங்கியது.
இன்று காலை தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது டாஸ் வென்ற வங்கதேசம்.
இதையடுத்து களம் இறங்கிய இந்தியா தனது முன்னணி வீரர்களை அடுத்தடுத்து இழந்து பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது.
வீரேந்திர ஷேவாக் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கெளதம் கம்பீர் 44 பந்துகளைச் சாப்பிட்டு 23 ரன்களோடு ஏறக்கட்டினார்.
ராகுல் டிராவிட் (4), வி.வி.எஸ்.லட்சுமண் (7), யுவராஜ் சிங் (12), திணேஷ் கார்த்திக் (0) ஆகியோர் படு மோசமான முறையில் ஆட்டமிழந்தனர்.
சச்சின் டெண்டுல்கர் மட்டுமே தாக்குப் பிடித்து ஆடிக் கொண்டிருக்கிறார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 213 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. சச்சின் 76 ரன்களுடனும், இஷாந்த் சர்மா ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
வங்கதேச தரப்பில் ஷஹாதத் ஹூசேன் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் தற்காலிக கேப்டன் வீரேந்திர ஷேவாக், வங்கதேச அணி ஒரு சாதாரணமான டெஸ்ட் அணிதான் என்று கூறியிருந்தார். ஆனால் இன்றைய இந்திய பேட்டிங் படு சாதாரணமாக இருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரே ஆறுதல் - சச்சின்!
இன்றைய ஆட்டத்தில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே ஆறுதல் சச்சின் படைத்த புதிய சாதனைதான்.
30 ரன்கள் எடுத்திருந்தபோது சச்சின் டெஸ்ட் போட்டியில் 13 ஆயிரம் ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்தார். இவ்வளவு ரன்களை எடுத்துள்ள ஒரே வீரர் சச்சின் மட்டும்தான்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:34 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications