கடைசிவரை உறுதியாக நின்ற அஸ்வின் - விஹாரி.. கலங்கிய ஆஸி. வீரர்கள்.. டிராவில் முடிந்த 3வது
சிட்னி: ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் பரபரப்பான ஆட்டத்திற்கு பின் டிராவில் முடிந்தது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் அதிரடியாக நடந்து முடிந்துள்ளது. இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் அஸ்வின் - விஹாரி சிறப்பான ஜோடி அமைத்து இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றி உள்ளனர்.
மணி நேரத்திற்கும் மேல் களத்தில் நின்று இந்திய அணியை தோல்வியில் இருந்து இவர்கள் இருவரும் மீட்டு உள்ளனர். மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா
ஆனால் அதன்பின் இந்திய அணியின் பேட்டிங் அவ்வளவு சரியாக இல்லை. முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணி வெறும் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடக்கத்தில் அதிரடியாக ஆடி வந்த இந்தியா அடுத்தடுத்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வந்தது. இந்திய அணியிலும் வரிசையாக பல வீரர்கள் காயம் அடைந்தனர் .

மோசம்
ஒரு பக்கம் பண்ட் காயம் அடைந்து பெவிலியன் திரும்பினார். அதேபோல் ஜடேஜாவும் காயம் அடைந்து வெளியேறினார். தற்போது பண்ட் காயத்தில் இருந்து விடுபட்டுள்ளார். ஆனால் ஜடேஜா இன்னும் முழுமையாக திரும்பவில்லை.

திணறல்
அதன்பின் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய அணி திணறியது. இந்த நிலையில் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தற்போது ஆஸ்திரேலியா ஸ்கோரை எடுக்க முயன்று இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

ரோஹித்
இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் ரோஹித் அரை சதம், பண்ட் 97 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்கள். அதன்பின் புஜாரா 77 ரன்களுக்கு அவுட்டாக, அஸ்வின் - விஹாரி இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடினார்கள். தோல்வி பெற வேண்டிய போட்டியை மீட்டு கொண்டு வந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் மூலம் டிரா செய்தனர்.

டிரா
அஸ்வின் 128 பந்தில் 39 ரன்கள் , விஹாரி 161 பந்தில் 23 ரன்கள் எடுத்து இந்திய அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து மீட்டு டிரா செய்தனர். இந்திய அணி 131 ஓவருக்கு 5 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிரா ஆனது. இதன் மூலம் இரண்டு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.


Click it and Unblock the Notifications