Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய ஒருநாள் அணியின் உத்தேச பட்டியல்..!!

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருநாள் தொடருக்கான அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

மேலும் யாரும் எதிர்பாராத வகையில், விராட் கோலியை ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து பி.சி.சி.ஐ. நீக்கியது.

தொடக்க வீரர்கள்

தொடக்க வீரர்கள்

தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து ரோகித் சர்மா இந்திய ஒருநாள் அணிக்கு தலைமை தாங்க உள்ளார். இந்த நிலையில், இந்த தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களின் உத்தேச பட்டியலை தற்போது காணலாம். தொடக்க வீரராக ரோகித் சர்மா, கே.எல். ராகுல் இடம்பெறுவார்கள். ருத்துராஜ் கெய்க்வாட் நல்ல பார்மில் இருந்தாலும் அவர் அணியில் கூடுதல் வீரராக இடம்பெறவே வாய்ப்புகள் அதிகம்

நடுவரிசை

நடுவரிசை

நடுவரிசையில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தேர்வாக வாய்ப்புள்ளது. கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் விராட் கோலி வேண்டுமானால் இந்த தொடரில் பங்கேற்காமல் ஓய்வில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் மற்றும் ஆல்ரவுண்டராக தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் தேர்வாக வாய்ப்புள்ளது. சுழற்பந்துவீச்சாளராக அஸ்வின் ஒருநாள் போட்டிக்கு மீண்டும் தேர்வாக வாய்ப்புள்ளது. கூடுதல் சுழற்பந்துவிச்சாளராக சாஹல் களமிறங்க வாய்ப்புள்ளது. ஒரு வேலை அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் இளம் வீரர் ரவி பிஷ்னாய் இந்திய அணியில் இடம்பெறலாம்.

Recommended Video

Highlights From India's Test squad for South Africa | OneIndia Tamil
வேகப்பந்துவீச்சாளர்

வேகப்பந்துவீச்சாளர்

வேகப்பந்துவீச்சாளராக பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, சிராஜ், சர்துல தாக்கூர் தீபக் சாஹர் ஆகியோர் ஒருநாள் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. கூடுதல் விக்கெட் கீப்பராக பாரத் அணியில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. இந்த அணியையே ரோகித் விரும்புவதாகவும், 90 சதவீதம் இந்த அணியையே தேர்வுக்குழுவினர் முடிவு செய்வார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Story first published: Monday, December 13, 2021, 22:18 [IST]
Other articles published on Dec 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+