Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிப்பு எப்போது? வாஷிங்டன் சுந்தரால் தள்ளிப் போகும் தேர்வு

மும்பை: இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இந்த வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இங்கிலாந்து ஒருநாள் தொடரின் போது காயமடைந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரின் உடற்தகுதி குறித்த இறுதி முடிவிற்காகத் தேர்வுக்குழுவினர் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது வாஷிங்டன் சுந்தருக்கு வலது தொடையில் காயம் ஏற்பட்டது. இதனால் லார்ட்ஸில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் அவரால் விளையாட முடியாமல் போனது. தற்போது அவர் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு பயிற்சி மையத்தில் தீவிர சிகிச்சையில் உள்ளார். காயம் குணமடைந்து அவர் முழு உடற்தகுதி பெற குறைந்தபட்சம் 2 வாரங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்திய அணி ஆகஸ்ட் 4 அன்றே இலங்கை புறப்பட உள்ளதால், அவரது தேர்வு குறித்து அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

India Test Squad for Sri Lanka tour to be announced this week Washington Sundar Injury discussed

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடாத முன்னணி வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இலங்கை டெஸ்ட் தொடருக்குத் திரும்புவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஜடேஜா தான் அணியின் நம்பர் 1 ஸ்பின்னர் என்று அஜித் அகர்கர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தர் ஒருவேளை விளையாடவில்லை என்றால், அவருக்குப் பதிலாக ஹர்ஷ் துபே அல்லது சுழற்பந்து வீச்சாளர் சாரன்ஷ் ஜெயின் சேர்க்கப்படலாம். மானவ் சுதர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தங்களது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வார்கள் எனத் தெரிகிறது.

ஆகஸ்ட் 15 அன்று காலே நகரில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் கீழ் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடுமையான சவால்களைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி முழுமையாகத் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது.

எனக்கு கிரெக் சாப்பல் காலம்தான் நினைவுக்கு வருது.. கம்பீர் குறித்து ஓபனாக பேசிய ஜெய்ஸ்வால் கோச்

எனக்கு கிரெக் சாப்பல் காலம்தான் நினைவுக்கு வருது.. கம்பீர் குறித்து ஓபனாக பேசிய ஜெய்ஸ்வால் கோச்

இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற வேண்டுமானால், இந்திய அணிக்கு இலங்கைத் தொடரில் சிறப்பான வெற்றி தேவைப்படுகிறது. இலங்கை தொடரை முழுமையாக வென்றாலும் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது கடினமே.

வைபவ் சூர்யவன்ஷி போலவே இந்த சீனியர் வீரரின் பேட்டிங்கையும் காலி செய்த கம்பீர்.. ஸ்ரீகாந்த் ஆவேசம்

வைபவ் சூர்யவன்ஷி போலவே இந்த சீனியர் வீரரின் பேட்டிங்கையும் காலி செய்த கம்பீர்.. ஸ்ரீகாந்த் ஆவேசம்
Story first published: Tuesday, July 21, 2026, 13:21 [IST]
Other articles published on Jul 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+