For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித்தின் புதிய முயற்சி தோல்வி..!! அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்..!! இந்திய அணி தடுமாற்றம்..!

அகமதாபாத்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

கே.எல். ராகுல் அணிக்கு திரும்பியதால், இந்திய அணியில் சில புதிய முயற்சியை ரோகித் சர்மா மேற்கொண்டார்.

ரோகித் முயற்சி

ரோகித் முயற்சி

முதல் போட்டியில் களமிறங்கிய இஷான் கிஷண் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கினார். ரிஷப் பண்ட்க்கு ஓபனிங் வாய்ப்பு தர வேண்டும் என்று பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இந்த ஆலோசனையை கூறி வந்த நிலையில், ரோகித் அதனை தைரியமாக நடைமுறைப்படுத்தினார்.

ஏமாற்றிய ரிஷப்

ஏமாற்றிய ரிஷப்

கேப்டன் ரோகித் சர்மா முதல் ஆட்டத்தில் 60 ரன்கள் எடுத்து நல்ல பார்மில் இருந்தார். ஆனால் இன்றைய போட்டியில் கீமர் ரோச் பந்துவீச்சில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 34 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்களை அடித்தார். அப்போது ஆஃப் சைடில் போடப்பட்ட ஷாட் பால், லேக் சைடில் திருப்பி அடிக்க ரிஷப் பண்ட் முயற்சி செய்து கேட்ச் ஆனார்.

கோலி ஆட்டமிழப்பு

கோலி ஆட்டமிழப்பு

சொந்த மண்ணில் 100வது சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி, இன்று சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 3 பவுண்டரிகளை கோலி விரட்டினார். பிறகு வழக்கம் போல் 4வது லைன் ஆப் ஸ்டம்ப் லைன் பந்தை தொட்டு விக்கெட் கீப்பரிடம் சிக்கினார் விராட் கோலி.

Recommended Video

IPL Auction 2022: Bidding Strategy Explained of 10 Teams | OneIndia Tamil
இந்தியா தடுமாற்றம்

இந்தியா தடுமாற்றம்

இதனால் இந்திய அணி 43 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இந்திய அணியின் நடுவரிசை வீரர்களான ராகுல், சூரியகுமார் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே மேற்கிந்திய தீவுகளுக்கு நெருக்கடி தர முடியும்.

Story first published: Wednesday, February 9, 2022, 16:51 [IST]
Other articles published on Feb 9, 2022
English summary
India top order Batsman struggling to score vs WI in 2nd odi ரோகித்தின் புதிய முயற்சி தோல்வி..!! அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்..!! இந்திய அணி தடுமாற்றம்..!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+