
இங்கிலாந்து சுற்றுப்பயணம்
இரு அணிகளுக்கும் இடையே வரும் ஜூலை 1ம் தேதி முதல் கடந்தாண்டு விடுபட்ட ஒரு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இதன் பின்னர் ஜூலை 7ம் தேதி முதல் ஜூலை 14 வரை 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெறவுள்ளது.

ஜூன் 19ல் பயணம்
இந்த தொடருக்கான ஓய்வில் இருந்த இந்திய அணியின் முக்கிய வீரர்கள் நேற்று இங்கிலாந்து சென்றடைந்தனர். தென்னாப்பிரிக்க தொடரில் விளையாடி வரும் வீரர்கள், வரும் ஜுன் 19ம் தேதியன்று இங்கிலாந்து புறப்படுகின்றனர். இதனால் போட்டி மீதான எதிர்பார்ப்பு ஏக போகத்திற்கு எகிறியுள்ளது.

அதிர்ச்சி தகவல்
இந்நிலையில் தான் அதிர்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது. காயத்தால் தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து வெளியேறிய கே.எல்.ராகுல், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்தும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை அவருக்கான கடைசி தேர்வு நடைபெறவுள்ளது. இதில் தேர்ச்சி அடையவில்லை என்றால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

மாற்று வீரர் யார்?
இது ஒருபுறம் இருக்க, கே.எல்.ராகுலின் இடத்திற்கு மயங்க் அகர்வாலை உறுதி செய்து அவருக்கு பெங்களூரு வருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 19ம் தேதி அனைவரும் ஒன்றாக இங்கிலாந்துக்கு விமானம் ஏறுகின்றனர். கே.எல்.ராகுல் பெரும்பாலும் விலகிவிடுவார் என்பதால் துணைக்கேப்டனாக ரிஷப் பண்ட்-ஐ யும் நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. தென்னாப்பிரிக்க தொடரிலும் ரிஷப் பண்ட்தான் கேப்டன்சி செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications