For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - 3 ஒருநாள், 5 டி20 போட்டி கொண்ட தொடர்.. அட்டவணை வெளியீடு

மும்பை: மேற்கிந்தியத் தீவுகளுக்கு வரும் ஜூலை மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதற்கான அட்டவணையை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி, அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டி20 போட்டியில் விளையாடுகிறது.

வெஸ்ட் இண்டீஸ்க்கு வங்கதேசம், இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது .

வங்கதேச தொடர்

வங்கதேச தொடர்

முதலில் வங்கதேச அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஜூன் 16ஆம் தேதியும், 2வது டெஸ்ட் ஜூன் 14ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜூலை 2, ஜூலை 3,ஜூலை 7 ஆகிய தேதிகளில் முறையே டி20 போட்டிகளும், ஜூலை 10, ஜூலை 13, ஜூலை 16 ஆகிய நாட்களில் முறையே ஒருநாள் போட்டியும் நடைபெறுகிறது.

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்

இதனைத் தொடர்ந்து இந்திய அணி வரும் ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. ஜூலை 22ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டியும், ஜூலை 24ஆம் தேதி 2வது ஒருநாள் போட்டியும், ஜூலை 27ஆம் தேதி 3வது ஒருநாள் போட்டியும் நடைபெறுகிறது. 3 போட்டிகளும் டிரிண்டாட்டில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்த டி20 தொடர் நடைபெறுகிறது. ஜூலை 29ஆம் தேதி முதல் டி20 போட்டி டிரிண்டாட்டில் நடைபெறுகிறது.

அட்டவணை

அட்டவணை

2வது டி20 போட்டி ஆகஸ்ட் 1ஆம் தேதி செயிட் கிட்ஸ் நகரிலும், 3வது டி20 போட்டி ஆகஸ்ட் 2ஆம் தேதி அதே மைதானத்திலும் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளன. அங்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி 4வது டி20 போட்டி லாண்டர்ஹில் மைதானத்திலும், ஆகஸ்ட் 7ஆம் தேதி 5வது டி20 போட்டிஅதே மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி போட்டி

இந்திய நேரப்படி போட்டி

ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கும், டி20 போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கும் நடைபெறுகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடர் தொடங்குவது குறிப்பிடத்தக்கது. இதே போன்று ஆகஸ்ட் 10ஆம் தேதி நியூசிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

Story first published: Thursday, June 2, 2022, 17:34 [IST]
Other articles published on Jun 2, 2022
English summary
India tour of West Indies scheduled, venue and timing announced இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - 3 ஒருநாள், 5 டி20 போட்டி கொண்ட தொடர்.. அட்டவணை வெளியீடு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+