சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா புதிய சாதனை.. 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அபாரம்
திருவனந்தபுரம் : இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வென்ற ஒரே அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது.
மேலும் இலங்கைக்கு எதிரான முழுமையாக 3 போட்டிகளையும் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. இந்தப் போட்டியில் விராட் கோலி 166 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் தனது 46வத சர்வதேச ஒருநாள் சதத்தை விரைவாக விராட் கோலி அடைத்தார்.
மேலும் சொந்த மண்ணில் அதிக ஒருநாள் சதம் விளாசிய வீரஙா என்ற பெருமையையும் விராட் கோலி படைத்தார். டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக சுப்மான் கில், கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினர்.

சுப்மான் கில்
சுப்மான் கில், ரோகித் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரோகித் சர்மா 3 சிக்சர்கள் விளசியதுடன் 42 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் சுப்மான் கில் 52 பந்தில் அரைதம் கடந்தார். இதனையடுத்து, விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த சுப்மான் கில், அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தினார். தொடக்க வீரர் சுப்மான் கில் 89 பந்துகளில் சதம் விளாசினார். அவருக்கு நன்றாக கம்பெனி கொடுத்த கோலி 48 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

விராட் கோலி சாதனை
இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்த நிலையில், சுப்மான் கில் 116 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து அதிரடி காட்டிய விராட் கோலி 85 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 38 ரன்கள் எடுத்த நிலையில், சூர்யகும்ர், கேஎல் ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

முகமது சிராஜ் அபாரம்
தொடர்ந்து அதிரடி காட்டிய விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் விளாசினார். இதில் 13 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் எடுத்தது. 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இல்ங்கை அணியின் பேட்டிங்கில் பெரிய பூகம்பத்தை உண்டாக்கினார் முகமது சிராஜ். தனது அனல் பறக்கும் பந்துவீச்சை வெளிப்படுத்திய சிராஜ், இலங்கையின் விக்கெட்டுகளை கொத்தாக வீழ்த்தினார்.

இமாலய வெற்றி
அவிஷ்கா பெர்னான்டோ 1 ரன்னிலும்,நுவனிந்தோ பெர்னான்டோ 19 ரன்களிலும், குசேல் மெண்டிஸ் 4 ரன்களிலும், அசலங்கா 1 ரன்னிலும் ஆட்டமிழத்னர். கேப்டன் அசலங்கா 11 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சிலும், ஹசரங்கா 1 ரன்னிலும், கருணரத்னேவும் 1 ரன்னில் வெளியேற, இலங்கை அணி 39 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியில் இலங்கை அணி 22 ஓவர் முடிவில் 73 ரன்களுக்கு சுருண்டு பதோல்வியை தழுவியது. சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். விராட் கோலி 38வது முறையாக ஆட்டநாயகன் விருதையும், 10வது முறை தொடர் நாயகன் விருதையும் வென்றார்.


Click it and Unblock the Notifications